நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழனிக்கோயில் உண்டியல் காணிக்கை வரவு: 21  நாள் வசூல் ரூ.1.41 ஒரு கோடியை தாண்டியது

பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் கடந்த 21 நாட்களில் நிறைந்ததைத் தொடர்ந்து திங்கள்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்களின் காணிக்கை வரவு ரூ.1.41 கோடியை

News image
Updated On :30 ஜூன் 2014, 1:35 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் கடந்த 21 நாட்களில் நிறைந்ததைத் தொடர்ந்து திங்கள்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்களின் காணிக்கை வரவு ரூ.1.41 கோடியை தாண்டியது.

பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் கடந்த 21 நாட்களில் நிரம்பியதைத் தொடர்ந்து திங்கள்கிழமை மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப்பணம் வரவு ரூபாய் ஒரு கோடியே 41 லட்சத்து 62 ஆயிரத்து 765 கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான காசுகள், தாலி, செயின், வேல், உருவங்களும், வெள்ளியால் ஆன வேல், உருவம், கொலுசுகள், பார் வெள்ளி, சுவாமி உருவம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 666 கிராமும், வெள்ளி 5 ஆயிரத்து 200 கிராமும் கிடைத்தன. 

மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 644 ம் வரப்பெற்றன. இவை தவிர ஏராளமான பக்தர்கள் பித்தளை பாத்திரங்கள், பட்டுப் புடவைகள்,  பரிவட்டங்கள், நவதானியங்கள், ரிஸ்ட் வாட்சுகள், ஏலக்காய் மாலைகளை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இந்த முறை ஏராளமான பித்தளை விளக்குகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.  சுமார் 40 கிலோ எடையிலான ஆள்உயர பித்தளை விளக்கு பலரையும் ஈர்த்தது.  உண்டியல் எண்ணிக்கையின் போது பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், கணக்கியல் அலுவலர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தவிர உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள்,  பழனி இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் பணியாளர்கள், திருக்கோயில் கல்லூரி மாணவிகள் என 800க்கும் மேற்பட்டோர் ஏராளமானோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.