கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புவிசார் குறீட்டால் அல்வா, மக்ரூன் உற்பத்தி பெருகும்: கலந்தாய்வில் தகவல்

திருநெல்வேலி அல்வா மற்றும் தூத்துக்குடி மக்ரூன் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு பெறுதல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம், திருநெல்வேலி சிரீபுரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவக்

News image
Updated On :1 மார்ச் 2014, 12:17 pm

முத்துகுமார்

புவிசார் குறியீடு பெற்றால் அல்வா, மக்ரூன் ஆகியவற்றின் உற்பத்தி பெருகும் என கலந்தாய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி அல்வா மற்றும் தூத்துக்குடி மக்ரூன் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு பெறுதல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம், திருநெல்வேலி சிரீபுரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சே.பிரதாபன் வரவேற்றார். வழக்குரைஞர் ப.சஞ்சய்காந்தி தலைமை வகித்தார்.

இந்திய அறிவுசார் சொத்துரிமைக் கழகத்தின் சென்னை புவிசார் குறியீடு பதிவகத்தின் உதவிப் பதிவாளர் சின்னராஜா ஜி நாயுடு பேசியதாவது:

நம் முன்னோர்களின் கண்டுபிடிப்பை ஆவணப்படுத்துவதும், நம் மண்ணின் பெருமையைத் தக்கவைத்துக் கொள்வதும்தான் புவிசார்குறியீடின் அடிப்படையாகும். உலகின் பிற நாடுகளில் 200 ஆண்டுகளுக்கு முன்பே புவிசார் குறியீடு உள்ளது.  ஆனால், நம் நாட்டில் 2003-ம் ஆண்டில் இருந்துதான் இந்தக் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் 198 பொருள்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை காஞ்சிபுரம் பட்டு, சேலம் மென்பட்டு, பத்தமடை பாய், நாகர்கோவில் கோயில்நகை தொழில்நுட்பம் உள்ளிட்ட 21 பொருள்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. சிரீவில்லிபுத்தூர் பால்கோவா உள்ளிட்ட 21 வகையான பொருள்களுக்கு புவிசார் குறியீடு அளிக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. உணவுப் பொருள்களில் திருப்பதி லட்டு உள்பட சுமார் 20 பொருள்களுக்கு மட்டுமே புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு பொருளின் தொன்மை, அதன் இன்றைய பயன்பாடு, ஆவணப்படுத்தப்பட்டுள்ள தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆராயப்பட்டுதான் புவிசார் குறியீடு அளிக்கப்படுகிறது. ஒரு அமைப்பு மூலம் ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்தால் அதன் அத்தனை அம்சங்கள் குறித்தும் 7 பேர் கொண்ட நிபுணர்கள் குழு பரிசீலிப்பார்கள். அதன்பின்பு புவிசார்குறியீடு வழங்கப்படுவது குறித்து அரசிதழில் அறிவிப்பு வெளியாகும். அப்போது அட்சேபனைகள் இருப்பவர்களின் எழுத்துப்பூர்வ கோரிக்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். சுமார் 4 மாதங்களுக்குப் பின்பும் அட்சேபனைகள் எதுவும இல்லாதபட்சத்தில் புவிசார் குறியீடு அளிக்கப்படும். அதன்பின்பு ஜி.ஐ. என்ற முத்திரையை அந்தப் பொருள்களின் மீது தயாரிப்பாளர்கள் அச்சிட்டு விற்பனை செய்யலாம்.

புவிசார் குறியீடு பெற்ற பொருளை சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர பிற ஊர்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயன்றால் குற்றவியல் நடவடிக்கைக்கு ஆளாக்க முடியும். புவிசார் குறியீடு வழங்கப்படுவதால் வெளிநாடுகளில் நமது பொருளை பதப்படுத்தி விற்பனை செய்தால் இங்கிருப்பதை விட பன்மடங்கு விலைக்கு விற்க முடியும். இதனால், புவிசார் குறியீடு பெறும் பொருள்களின் உற்பத்தி அதிகரிக்கும்.  உள்ளூரில் விலை உயர்ந்துவிடுமோ என்று அச்சம் கொள்ள தேவையில்லை. திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன் குறித்த அனைத்து தகவல்களையும் தொகுத்து ஒரு அமைப்பின் கீழ் விண்ணப்பித்தால் புவிசார் குறியீடு வழங்க விரைவாகப் பரிசீலிக்கப்படும் என்றார் அவர்.

இந்த விழாவில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர்கள் மு.முருகன், சே.செந்தில்குமார், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த அல்வா, மக்ரூன் உற்பத்தியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.