ஆம்பூர் பகுதியில் மணல் கடத்திய ஒரு டிப்பர் லாரி மற்றும் 2 டிராக்டர்களை வருவாய் துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
ஆம்பூர் வட்டாட்சியர் சரஸ்வதி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம், மணி, செந்தில்குமரன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆம்பூர் பகுதியில் சனிக்கிழமை இரவு திடீர் சோதனை நடத்தினர். அப்போது மின்னூரில் மணல் கடத்திய ஒரு டிப்பர் லாரி, ஆம்பூர் பைபாஸ் சாலையில் ஒரு டிராக்டர், பார்சனாப்பல்லி கிராமத்தில் ஒரு டிராக்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.