3 லாரிகளில் நிலக்கரியை கடத்தி விற்க முயன்றவர் கைது
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து போலி ஆணை மூலம் 3 லாரிகளில் நிலக்கரியை பெற்று விற்க முயன்றதாக ஒருவரை போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மேலும், 5 பேரை தேடி


தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து போலி ஆணை மூலம் 3 லாரிகளில் நிலக்கரியை பெற்று விற்க முயன்றதாக ஒருவரை போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மேலும், 5 பேரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலை நடத்தும் அனல் மின் நிலையத்துக்கு வஉசி துறைமுகம் வழியாக நிலக்கரி கொண்டு வரப்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த 27-ம் தேதி இந்த நிறுவனத்துக்கு வந்த 75 டன் நிலக்கரியை சிலர் கடத்திச் சென்றுவிட்டதாக புகார் கூறப்பட்டது.இதுகுறித்து தெர்மல்நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து போலி ஆணை மூலம் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் 3 லாரிகளில் நிலக்கரியை பெற்றிச் சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், 3 லாரிகளில் கொண்டுச் செல்லப்பட்ட 75 டன் நிலக்கரியை தனியாரிடம் அவர்கள் விற்க முயன்றதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக, பிரையன்ட்நகர் 7-வது தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மாரியப்பனை (31) தெர்மல்நகர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.அவருக்கு உறுதுணையாக இருந்த லாரி ஓட்டுநர்கள் ராஜா, சசி, ஆனந்த் உள்பட 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...