பண்ருட்டி அருகே பாமக நிர்வாகி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு
கீரப்பளையம் பண்ருட்டி அருகே நடுவீர்பட்டு அருகே வசித்து வந்தவர் கோபால் மகன் ராஜாராம்(35). பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய செயற்குழுவில் இருந்துவந்தார். இவருடைய தம்பி ராமசந்திரன் அதே


கீரப்பளையம் பண்ருட்டி அருகே நடுவீர்பட்டு அருகே வசித்து வந்தவர் கோபால் மகன் ராஜாராம்(35). பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய செயற்குழுவில் இருந்துவந்தார். இவருடைய தம்பி ராமசந்திரன் அதே கட்சியில் ஒன்றிய தலைவராக உள்லார். இவங்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய செயலர் தணிகாசலத்திற்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சனிகிழமை அன்று இருதரப்பினர்களுக்கிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து நடுவீரபட்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து திங்கள்கிழமை இரவு தணிகாசலம் கோஷ்டியினர் ராஜாராம் வீட்டை தீயிட்டனராம்.
இச்சம்பவம் குறித்து அறிந்த பாமக கடலூர் பாராளுமன்ற வேட்பாளர் கோவிந்தசாமி மற்றும் நிர்வாகிகள் ஆறுதல் கூற ராஜாராம் வீட்டுக்கு இன்று மாலை வந்தனர். இச்சமயம் ராஜாராம் சம்பவ இடத்தில் இல்லாததால் சந்தேகம் அடைந்து தேடிப்பார்த்தபோது, அருகில் உள்ள முந்திரிகாட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ராஜாராம் காணப்பட்டார். பிரேதத்தை கைப்பற்றிய போலீஸார் கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் முன்விரோதம் காரணமாக வாமகவைச் சேர்ந்த தணிகாசலம் கோஷ்டியினர ராஜாராமை கொலை செய்திருக்கலாமோ என அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...