மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு
15வது மக்களவை முடிவடைவதையொட்டி மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்தியா முழுவதும் 6 அல்லது 7


15வது மக்களவை முடிவடைவதையொட்டி மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்தியா முழுவதும் 6 அல்லது 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இந்த தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவரும் அதேவேளையில் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. மேலும் கூட்டணிகளை உருவாக்குதல் மற்றும் தொகுதி உடன்பாடு என அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது.
இந்நிலையில் 16வது மக்களவையை தேர்தெடுப்பதற்கான தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் நாளை மக்களவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பினை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. காலை 10.30 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...