யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சேலம் நீதிமன்றத்தில் பரபரப்பு: தீர்ப்பைக் கேட்டதும் தப்பியோடிய குற்றவாளி

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவர், நீதிமன்றத்தில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதும் தப்பியோடிய சம்பவம் சேலத்தில்

News image
Updated On :6 மார்ச் 2014, 3:23 pm

தங்கராஜா

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவர், நீதிமன்றத்தில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதும் தப்பியோடிய சம்பவம் சேலத்தில் வியாழக்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது.

 சேலம் கருங்கல்பட்டியைச் சேர்ந்தவர் குமார் (54). இவரும் விளாம்பட்டி செல்வி (31), சென்னிமலை சென்னியப்பன் (75), மூக்கனூர் ராணி (50), வரதராஜபுரம் நடராஜன் (61) ஆகியோரும் கள்ள ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தது, அவற்றை புழக்கத்தில் விட்டது ஆகிய குற்றங்களுக்காக கடந்த 19.8.2009 அன்று கைது செய்யப்பட்டனர்.

 சேலம் நகர குற்றப்பிரிவு போலீஸôரால் கைது செய்யப்பட்ட இவர்கள், ஜாமீனில் வெளியே இருந்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் மீதான வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அனைவரும் நீதிமன்றம் வந்திருந்தனர்.

 வழக்கை விசாரித்த சேலம் முதன்மை உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆனந்த், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த குமார், செல்வி, சென்னியப்பன், ராணி ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 மேலும் நடராஜனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து குற்றவாளிகளிடம் கையெழுத்து பெறுவதற்காகவும் அவர்களது அங்க அடையாளங்களை பதிவு செய்யவும் நீதிமன்ற ஊழியர்கள் ஒவ்வொருவரையும் அழைத்தனர்.

 அப்போது கருங்கல்பட்டியைச் சேர்ந்த குமார், நீதிமன்றத்தில் இருந்து தப்பிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

 இது குறித்து அறிந்ததும் மாநகர காவல் துணை ஆணையர் ஏ.ஜி.பாபு தலைமையிலான போலீஸôர், நீதிமன்ற வளாகத்தில் சோதனை நடத்தினர். இருப்பினும் குற்றவாளி கிடைக்கவில்லை. இது குறித்து அஸ்தம்பட்டி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து குமாரைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.