தத்தளிக்கும் இலங்கை: வங்கதேசத்தை வெல்ல போராட்டம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை வங்க் தேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடத்தொடங்கியது.


ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை வங்க் தேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடத்தொடங்கியது.
அந்த அணியின் துவக்க வீரர்கள் அனமவுல்(49) ரகுமான்(39), நல்ல துவக்கத்தை தந்த போதிலும் அடுத்தடுத்து வீரர்கள் அவுட் ஆனதால் 50 ஒவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் மட்டுமே எடுத்தது
இதனை தொடர்ந்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்தொடங்கிய இலங்கை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெரரா முதல் ஒவரிலேயே டக் அவுட் ஆனார். இதனை தொடர்ந்து வந்த சங்கர்கரா 2 ரன்னிலும், ஜெயவர்த்தனே ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆக 8 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
எனினும் சுதாரித்து ஆடிய பிரியன்சன் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜியவர் ரகுமான் பந்தில் அவுட் ஆனார். இதனை தொடர்ந்து திரிமன்னேவும் 33 ரன்னில் வெளியேற அந்த அணி வெற்றி தடுமாற்றத்துடன் ஆடிவருகிறது.
தற்போதைய நிலவரப்படி இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 30 ஓவரில் 5விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களுடன் ஆடிவருகிறது. மேத்யூஸ் 30 ரன்களுடனும், டி சில்வா 9 ரன்களுடனும களத்தில் உள்ளனர்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...