வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திரையரங்கில் மனைவிக்கு பாலியல் தொந்தரவு: தட்டிக்கேட்ட கணவனின் மண்டை உடைப்பு

சென்னை திருவொற்றியூர் கலைவாணர் நகரை சேர்ந்த அனந்த கிருஷ்ணன் (25). என்பவ்ர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார்.  நேற்று மாலை இவர் தனது மனைவியுடன் பேசின்

News image
Updated On :7 மார்ச் 2014, 11:33 am

வேல்முருகன்

சென்னை திருவொற்றியூர் கலைவாணர் நகரை சேர்ந்த அனந்த கிருஷ்ணன் (25). என்பவ்ர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார்.  நேற்று மாலை இவர் தனது மனைவியுடன் பேசின் சாலையில் உள்ள திரையரங்கில்  படம் பார்த்து கொண்டிருந்தார்.

. அப்போது திரையரங்கில் பின் வரிசையில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் அனந்த கிருஷ்ணன் மனைவி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்  இதுபற்றி கணவரிடம் கூறியிருக்கிறார். இதனையடுத்து அந்த இளையரை அனந்த கிருஷ்ணன் தட்டி கேட்டுள்ளார். அப்போது வாய்த்தகராறு முற்றியதாக கூறப்படுகிறது,

அதில் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலால் அனந்த கிருஷ்ணன் தலையை கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார்.

இதில் படுகாயம்டைந்த அனந்த கிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து திருவொற்றியூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார் அனந்த கிருஷ்ணனை தாக்கியதாக  திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த விக்கி (27) என்பவரை  கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.