வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரசியலே எனக்கு வேண்டாம்-ரஜினிகாந்த்; கிங்மேக்கராக இருந்தால் போதும்: ஐஸ்வர்யா

நேற்று நடைபெற்ற கோச்சடையான் இசை வெளியீட்டு விழால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் உங்கள் ஆதரவு பாரதீய ஜனதாவுக்கா,

News image
Updated On :10 மார்ச் 2014, 10:37 am

வேல்முருகன்

நேற்று நடைபெற்ற கோச்சடையான் இசை வெளியீட்டு விழால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் உங்கள் ஆதரவு பாரதீய ஜனதாவுக்கா, ஆம் ஆத்மி கட்சிக்கா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த அவர் அரசியலே வேண்டாம் என்று கூறினார். இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு அவரது மகள் ஐஸ்வர்யா பதில் அளித்துள்ளார்.

அவர் கூறும் போது எனது தந்தை ரஜினிக்கு அரசியல் வேண்டாம் என்று நினைக்கிறேன். அவர் அமைதியாக வாழ வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருக்கிறது. ரஜினி ‘கிங்’காக இருக்க வேண்டாம். கிங்மேக்கராக இருந்தால் போதுமானது. தனுஷ் என் தந்தை போல இருக்கிறார். அதனால் தானோ என்னவோ அவரை மணந்தேன்.

3 படத்தில் தனுசை கதாநாயகனாக நடிக்க வைத்து எடுத்தேன். எனது அடுத்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.