பாபநாசம், சேர்வலாறில் மின்சாரம் உற்பத்தி பாதிப்பு
பாசனத்திற்கு தண்ணீர் தேவையில்லாததால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் மூடப்பட்டன. அணைகள் மூடப்பட்டதால் பாபநாசம், சேர்வலாறு நீர்மின் உற்பத்தி நிலையங்களில்


பாசனத்திற்கு தண்ணீர் தேவையில்லாததால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் மூடப்பட்டன. அணைகள் மூடப்பட்டதால் பாபநாசம், சேர்வலாறு நீர்மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யவில்லை என அணை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேற்குத் தொடர்ச்சி மலை நீர் ஆதாரத்தை கொண்டு தாமிரவருணி ஆற்றின் குறுக்கே பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் கட்டப்பட்டுள்ளன. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீரில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.சேர்வலாறு அணையில் 20 மெகாவாட் மின்சாரமும், பாபநாசம் அணையில் 32 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யலாம். சேர்வலாறு அணையில் மின்சாரம் உற்பத்தி செய்ய நீர்மட்டம் 65 அடிக்கு அதிகமாக இருக்க வேண்டும். மேலும் அணையில் இருந்து 1,200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டால்தான் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். திங்கள்கிழமை அணையின் நீர்மட்டம் 64.57 அடியாக இருந்தது.
பாபநாசம் மின் உற்பத்தி நிலையம், அங்குள்ள 4 டர்பன் மூலம் 32 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. அணையில் இருந்து 250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டால் ஒரு டர்பனை இயக்கி 8 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். தற்போது பாசனத்திற்கு தண்ணீர் தேவையில்லாத காரணத்தால் பாபநாசம், சேர்வலாறு அணைகள் மூடப்பட்டன.குடிநீர் தேவைக்காக மட்டும் பாபநாசம் அணையில் 54.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆகவே பாபநாசம், சேர்வலாறு நீர் மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அணைகளின் நீர்மட்டம்: திங்கள்கிழமை பாபநாசம் அணையின் நீர்மட்டம் 51.20 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 64.57 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 72.97 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 38.70 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 25.00 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 29.03 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 37.50 அடியாகவும் இருந்தது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 99.65 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 81 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 15.77 கனஅடியாகவும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 10 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. பிற அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...