நாடாளுமன்ற தேர்தல்: பறக்கும் படை அதிகாரிகள் சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனை
நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை யொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பொன்னேரி சட்டமன்ற


நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை யொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வட்டாட்சியர்கள் ரூபிநளினி, அந்தோணி, அன்புசெல்வன் ஆகியோர் தலைமையில் மூன்று (தேர்தல்) பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தேர்தல் விதிகளை மீறி உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் பணம் எடுத்து செல்பவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்செட்டி, தச்சூர் கூட்ரோட், ஜனப்பச்சச்திரம் கூட்ரோட் உள்ளிட்ட இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வாகன சோதனையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 4லட்சத்தி 90ஆயிரம் பணம் மற்றும் இரண்டு சாமி சிலைகளை அண்மையில் பறிமுதல் செய்துள்ளனர். அதே நேரத்தில் உரிய ஆவணங்களை காட்டினால் பணம் மற்றும் பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி அளிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...