கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லையில் 687 சட்டைகள் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் தேர்தல் பறக்கும் படை வட்டாட்சியர் கந்தசாமி தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர் மாடசாமி, போலீஸார் கண்ணன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரைக் கொண்ட

News image
Updated On :12 மார்ச் 2014, 10:12 am

முத்துகுமார்

திருநெல்வேலியில் தகுந்த ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 687 சட்டைகளை, தேர்தல் பறக்கும் படையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் தேர்தல் பறக்கும் படை வட்டாட்சியர் கந்தசாமி தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர் மாடசாமி, போலீஸார் கண்ணன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரைக் கொண்ட படையினர் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். திருநெல்வேலி புதிய பஸ்நிலையம் அருகே டக்கரம்மாள்புரம் பகுதியில் வாகனங்களைச் சேதனையிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு சுமை ஆட்டோவில் தகுந்த ஆவணங்களின்றி 687 சட்டைகள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சேர்ந்த தர்வீஸ் மகன் நாகூர்கனி (28) தலைமையில் உசேன், அப்துல்லா, சேக்முகைதீன், நாகூர்மீரான், மாணிக்கம் உள்ளிட்டோர் மண்டைக்காடு பகுதிக்கு சட்டைகளை விற்பனைக்காக கொண்டு சென்றுவிட்டு மீண்டும் தங்களது ஊருக்கு சுமை ஆட்டோவில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தனராம். இருப்பினும், தகுந்த ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அந்த சட்டைகள் அனைத்தையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு, துணை தேர்தல் அதிகாரி லட்சுமி சட்டைகளைப் பார்வையிட்டார். பிடிபட்டுள்ள சட்டைகள் சுமார் ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.