வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அணைகள் மூடப்பட்டதால் நெல்லை மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் பாதிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் மூடப்பட்டதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே  அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என

News image
Updated On :12 மார்ச் 2014, 11:41 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் மூடப்பட்டதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே  அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ சாகுபடி அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் தேவையில்லாத காரணத்தாலும், கடந்த சில தினங்களுக்கு முன் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததாலும் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகள் மூடப்பட்டன.

பருவ மழை குறைந்த காரணத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகள் முழு கொள்ளளவை எட்டவில்லை. அணைகளின் நீர்மட்டம் குறைந்து காணப்படுவதால்  கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் குடிநீர் தட்டுபாடு எழாமல் சமாளிக்க வேண்டியுள்ளது.புதன்கிழமை (மார்ச் 12 ம் தேதி) அணைகளின் நீர்மட்டம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 51.25 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 64.53 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 73.02 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 38.10 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 25.00 அடியாகவும் இருந்தது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 23.38 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 31 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 15.77 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 10 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. அணைகளுக்கு நீர்வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது.

அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் தாமிரவருணி ஆற்றில் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் ஆற்றில் உள்ள குடிநீர் திட்ட உறைகிணறுகளுக்கு போதிய நீர் ஆதாரம் இல்லாததால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஆகவே அணைகளில் இருந்து குடிநீர் தேவைக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.