வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நெல்லை: வாகனச் சோதனையில் ரூ. 1.30 லட்சம் சிக்கியது: ஆவணங்கள் சமர்ப்பித்ததால் ரூ. 2 லட்சம் ஒப்படைப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒவ்வொரு பேரவைத் தொகுதிக்கும் 3 பறக்கும்படை, 3 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும்படை மற்றும் கண்காணிப்பு குழுவினர் சுழற்சி முறையில் வாகனச்

News image
Updated On :15 மார்ச் 2014, 12:38 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் பறக்கும்படை அதிகாரிகள் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ. 3.30 லட்சம் சிக்கியது. உரிய ஆவணங்கள் சமர்ப்பித்ததால் ரூ. 2 லட்சம் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. ரூ. 1.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒவ்வொரு பேரவைத் தொகுதிக்கும் 3 பறக்கும்படை, 3 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும்படை மற்றும் கண்காணிப்பு குழுவினர் சுழற்சி முறையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சனிக்கிழமை பாளையங்கோட்டை பேரவைத் தொகுதி பறக்கும்படையினர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் தலைமையில் தியாகராஜநகர் ரயில்வே கேட் அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கட்டுமானத் தொழில் செய்து வரும் பொறியாளர் ஜோஸ்அண்டர்சன் என்பவர் காரில் ரூ. 2 லட்சம் கொண்டு வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் பொறியாளர் ஜோஸ்அண்டர்சன் திருநெல்வேலி நகரில் உள்ள வங்கியில் இருந்து பணம் எடுத்து கொண்டு சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களுக்கு பணம் கொடுக்க சென்றதும் தெரியவந்தது. அதிகாரிகளிடம் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் ரூ. 2 லட்சம் உரிமையாளரிடம் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி பேரவைத் தொகுதி பறக்கும்படை வட்டாட்சியர் ஏ.எஸ். அபுல்காசிம் தலைமையில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் திருநெல்வேலி அருகே பழையப்பேட்டையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தென்காசியில் இருந்து வந்த காரில் அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மாரியப்பன் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 1.30 லட்சம் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் ரூ. 1.30 லட்சம் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.