ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சிதம்பரத்தில் குடிபுகுந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

சிதம்பரம் நாடாளுமன்ற (தனி) தொகுதி தேர்தல் பொறுப்பாளராக கே.ஏ.செங்கோட்டையனை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நியமனம் செய்துள்ளார். கடந்த பிப்.11-ம் தேதி முதல்வர் வருகைக்கு முன்பு

News image
Updated On :16 மார்ச் 2014, 12:11 pm

ஜி.சுந்தரராஜன்

தேர்தல் பணியாற்ற அதிமுக தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் சிதம்பரம் நகரில் தனி வீடு வாடகைக்கு வீடு எடுத்து குடிபுகுந்துள்ளார்.

சிதம்பரம் நாடாளுமன்ற (தனி) தொகுதி தேர்தல் பொறுப்பாளராக கே.ஏ.செங்கோட்டையனை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நியமனம் செய்துள்ளார். கடந்த பிப்.11-ம் தேதி முதல்வர் வருகைக்கு முன்பு வந்த இவர் சிதம்பரம் மேலபுதுத்தெருவில் தனி வீடு வாடகைக்கு எடுத்து தங்கி பம்பரம் போல் பணியாற்றி வருகிறார். தேர்தல் முடியும் வரை இவர் சிதம்பரத்தில் தங்கி தேர்தல் பணியாற்றுவார் எனக்கூறப்படுகிறது.

தினமும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளான தமிழகவாழ்வுரிமை கட்சி, மூவேந்தர் முன்னற்றக்கழகம் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். மேலும் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவன் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் தேர்தல் பிரசார வியூகங்களையும் வகுத்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.