வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஒரு தலைக்காதலால் விபரீதம்: திருமணம் செய்து வைக்க மறுத்ததால் +2 மாணவி கழுத்தை அறுத்து படுகொலை

ஒருதலையாக காதலித்த மாணவியை அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுத்ததால், ஆத்திரம் அடைந்த வாலிபர் அந்த மாணவியை கழுத்தை அறுத்து படுகொலை

News image
Updated On :17 மார்ச் 2014, 11:18 am

வேல்முருகன்

ஒருதலையாக காதலித்த மாணவியை அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுத்ததால், ஆத்திரம் அடைந்த வாலிபர் அந்த மாணவியை கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார்,

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகில் உள்ள திருவழுதிவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் இன்பராஜ் (வயது 41). இவர் சென்னை மீஞ்சூர் அருகே உள்ள மணலிபுதுநகரில் மனைவி, கிருஷ்ணவேணி (40). மகள் அனுபாரதி (17),வசித்து வருகிறார்.   அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அனுபாரதி பிளஸ்–2 படித்து வருகிறார்..

இந்நிலையில் இன்பராஜின் சொந்த ஊரான திருவழுதிவிளை கிராமத்தை கிராமத்தில் உள்ள உறவினர் கருவேலமுத்து என்பவரின் மகன், ஜெயராமன் (23). உறவினர் என்ற முறையில் சென்னையில் உள்ள இன்பராஜின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார்.

, இன்பராஜின் மகள் அனுபாரதியை ஜெயராமன் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணலிபுதுநகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று ஜெயராமன் வந்தார். அப்போது கிருஷ்ணவேணி, அவருடைய மகள் அனுபாரதி இருவரும் வீட்டில் இருந்தனர்.

அப்போது கிருஷ்ணவேணியிடம், உங்கள் மகள் அனுபாரதியை திருமணம் செய்ய விரும்புகிறேன், அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று ஜெயராமன் கூறி இருக்கிறார். அதற்கு கிருஷ்ணவேணி, அனுபாரதி தற்போது படித்து வருவதால் பின்பு பார்க்கலாம் என்று கூறிவிட்டு மாடியில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.

அப்போது ஒருதலையாக காதலித்த அனுபாரதியை திருமணம் செய்து வைக்க கிருஷ்ணவேணி மறுத்துவிட்டதால் ஜெயராமன் ஆத்திரம் அடைந்தார். தான் விரும்பிய பெண் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற ஆத்திரத்தில், வீட்டில் தனியாக இருந்த மாணவி அனுபாரதியின் கழுத்தை கத்தியால் அறுத்து படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடினார்.

 இதனை கண்ட பொதுமக்கள் அவரை பிடித்து அடித்து உதைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று ஜெயராமனை கைது செய்தனர். இதனை தொடர்ந்து உயிரிழந்த  அனுபாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட ஜெயராமனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.