வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 8 தொகுதிகள்: வேட்பாளர் பட்டியல் தயார்

பாஜகவில் தொகுதி எண்ணிக்கை பங்கீடு சுமூகமாக முடிந்த நிலையில், சில தொகுதிகள் யாருக்கு என்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில் 8 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை பா.

News image
Updated On :17 மார்ச் 2014, 9:10 am

வேல்முருகன்

பாஜகவில் தொகுதி எண்ணிக்கை பங்கீடு சுமூகமாக முடிந்த நிலையில், சில தொகுதிகள் யாருக்கு என்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில் 8 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை பா.ஜ.க.வில் ஏற்கனவே தேர்வு செய்து விட்டனர். அந்த வேட்பாளர்கள் விவரம் :–

 கன்னியாகுமரி – பொன்.ராதாகிருஷ்ணன்

கோவை – வானதி சீனிவாசன்

தென்சென்னை – இல.கணேசன்

ஸ்ரீபெரும்புதூர்– டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்

ராமநாதபுரம் – கருப்பு முருகானந்தம்

சிவகங்கை – எச். ராஜா

திருப்பூர் – ஜி.கே.செல்வக்குமார்

தென்காசி – அய்யாவழி போதகர் சிவச்சந்திரன்

இந்த தொகுதிகளில் கோவையில் போட்டியிட முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும்.. ஆனால் சொந்த ஊர் என்பதால் கோவையில் போட்டியிட வானதி சீனிவாசன் தீவிரமாக உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பா.ஜ.க. கூட்டணி விரும்பும் இந்த 8 தொகுதிகளில் திருப்பூர் மாறலாம் என்று கூறப்படுகிறது. இன்று அல்லது நாளை இதில் முடிவு எட்டப்பட்டு விடும்.

பாஜக கூட்டணியில் தே.மு.தி.க.–14, பா.ஜ.க.–8, பா.ம.க.–8, ம.தி.மு.க–7, கொங்கு நாடு கட்சி–1, இந்திய ஜனநாயக கட்சி–1 என்ற ரீதியில் 39 தொகுதிகளிலும் பங்கீடு செய்யப்பட்டுள்ளத குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.