நெல்லை ஆம் ஆத்மி வேட்பாளராக மை.பா. ஜேசுராஜ் தேர்வு
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், ஆழ்வார்குறிச்சியை அடுத்த செட்டிகுளம் கிராமத்தில் 3.4.1973-ல் பிறந்தவர். இவரது தந்தை மைக்கேல் பாண்டியன், தாய் ஞானப்பூ. இவருக்கு 3 அண்ணன்கள்,


திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கான ஆம் ஆத்மி வேட்பாளராக மை.பா. ஜேசுராஜ் (41) அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், ஆழ்வார்குறிச்சியை அடுத்த செட்டிகுளம் கிராமத்தில் 3.4.1973-ல் பிறந்தவர். இவரது தந்தை மைக்கேல் பாண்டியன், தாய் ஞானப்பூ. இவருக்கு 3 அண்ணன்கள், ஒரு தம்பி உள்ளனர். இளநிலை மெய்யியல் பட்டப்படிப்பை மதுரை அருளானந்தர் கல்லூரியிலும், இளநிலை இறையியல் பட்டப்படிப்பை சென்னை தூய இருதயக் கல்லூரியிலும் பயின்றவர்.
மாணவர் பருவத்தில் இருந்தே பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர். 1996-ல் தமிழர் களத்தில் இணைத்து தொடர்ந்து தமிழர் மற்றும் தமிழக நலனுக்காக போராடி வந்தவர். 2000-ல் கத்தோலிக்க திருச்சபை பணியில் இணைந்தார். பாளையங்கோட்டை, பேட்டை, சுரண்டை, சிங்கம்பாறை, வேலாயுதபுரம், சேரன்மகாதேவி ஆகிய தேவாலயங்களில் பணியாற்றியவர்.அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் தொடக்கக் காலத்தில் இருந்தே இயங்கி வந்தவர், இடிந்தகரையில் போராட்டம் தீவிரமடைந்தபோது அங்கு சென்று இன்றுவரை அங்கேயே மக்களுடன் தங்கி போராடி வருகிறார். இப்போது, ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...