தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ரூ.50000 லஞ்சம் கேட்ட வணிகவரித்துறை பெண் அதிகாரி கைது

கோவை வணிகவரித்துறையில் பணியாற்றுபவர் மோகனாம்பாள்(56).இவர் இரு தினங்களுக்கு முன் ஆவாரம்பாளையம் சித்தாப்பூர் பகுதியில் கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான லேத் தொழிற்சாலையில்

News image
Updated On :19 மார்ச் 2014, 12:49 pm

சீனிவாசன்

கோவை வணிகவரித்துறையில் பணியாற்றுபவர் மோகனாம்பாள்(56).இவர் இரு தினங்களுக்கு முன் ஆவாரம்பாளையம் சித்தாப்பூர் பகுதியில் கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான லேத் தொழிற்சாலையில் சோதனை மேற்கொண்டார். அப்போது 2008-09மாண்டுகளில் கணக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், அதற்கு ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டும் என்றும் தெரிவித்தார்.அதற்கு பதிலளித்த கருப்பசாமி அனைத்து கணக்குகளும் முறைப்படி தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனை ஏற்காத மோகனாம்பாள் அபராதத்திலிருந்து தப்ப ரூ.50000 தனக்கு தரவேண்டும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து கருப்பசாமி கோவை லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார். போலீஸாரின் அறிவுரையின்படி பணத்தை மோகனாம்பாளிடம் கொடுக்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.