/

பெண்ணின் கர்ப்பப்பையில் 7 கிலோ எடையுள்ள கட்டி: ஸ்ரீவிலி. மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் மருத்துவமனையில் பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்த 7.250 கி.கி எடையுள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் எடுத்துள்ளனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:45 am

ஜெயகுமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் மருத்துவமனையில் பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்த 7.250 கி.கி எடையுள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் எடுத்துள்ளனர்.

ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (39). இவருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அச்சங்குளத்தைச் சேர்ந்த மகேசன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று இரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உண்டு.

இந்நிலையில் கோவிந்தம்மாளுக்கு கடந்த இரு ஆண்டுகளாக வயிறு பெரிதாகவும், வலி இல்லாமலும் இருந்துள்ளது. சரியாக சாப்பிட முடியாத நிலையில் இருந்த அவர், ஸ்ரீவில்லிபுத்தூர், கூனங்குளம் வடக்குத் தெருவில் உள்ள தனியார் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் வந்து தனது நிலையைக் கூறியுள்ளார். அவரை பல்வேறு பரிசோதனைகள் செய்த டாக்டர் சி.மேரி ஜெனோவா, கர்ப்பப்பையில் கட்டி இருப்பதாகக் கூறியுள்ளார்.

இதனையடுத்து அறுவை சிகிச்சை நிபுணர் கோபாலகிருஷ்ணன், மயக்க மருந்து நிபுணர் மாரியப்பன், டாக்டர் மேரி ஜெனோவா ஆகியோர் சேர்ந்து சுமார் 2 மணி நேரங்களுக்கு மேலாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு கர்ப்பப்பையிலிருந்த 7.250 கி.கி. எடையுள்ள கட்டியை அப்புறப்படுத்தினர். வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறிய டாக்டர் மேரி ஜெனோவா, பெண்களுக்கு சதாரணமாக கர்ப்பப்பையில் கட்டி இருக்கும். ஆனால் இவ்வளவு எடையுள்ள பெரிய கட்டி இருப்பது அபூர்வம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.