விருதுநகர் மக்களவை தொகுதியின் வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிப்பதற்காக செலவின பார்வையாளர்களை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதை அதற்கான பணிகளில் மாவட்ட மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அதேபோல், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் தனது ஆதரவாளர்கள் ஆகியோருடன் கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசு விதிமுறைகளுக்கு உள்பட்டு வேட்பாளர்கள் செலவு செய்கிறார்களா அல்லது அதையும் மீறி செய்கிறார்களா என்பதை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு மக்களவை தொகுதிக்கும் 2 செலவின பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியனம் செய்துள்ளது.
அவ்வகையில் விருதுநகர் மக்களவை தொகுதியில் உள்ள திருமங்கலம், திருப்பரங்குன்றம், விருதுநகர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக மேற்கு வங்காள அரசின் இந்திய பாதுகாப்பு கணக்கு துறையின் அதிகாரி ஓ.கே.ஜனாவும், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மகராஷ்டிராவின் இந்திய பாதுகாப்பு கணக்கு துறையின் அதிகாரி திவாரியையும் தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. இவர்கள் இம்மாதம் 28-ம்தேதி விருதுநகர் மக்களவை தொகுதியில் செலவின கண்காணிப்பு பணியில் ஈடுபட இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு... தினப்பலன்கள்!

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

