பழனி அருகே இரட்டைக் கொலை. ரூ. 23 லட்சத்துடன் கார் டிரைவர் தலைமறைவு
பழனி அருகே பாலசமுத்திரம்-பாலாறு பொருந்தலாறு அணை பிரதான சாலையில் பண்ணை வீட்டில் வசிப்பவர் நாராயணசாமி நாயுடு மனைவி தனுஸ்வரி(36). நாராயணசாமியின் இரண்டாவது மனைவியான


பழனி அருகே பெண்ணையும், உறவினரையும் கொலை செய்த டிரைவர் ரூ.23 இலட்சம் பணத்துடன் தலைமறைவானார். மேலும் இறந்த பெண்ணின் 13வயது மகளும் மாயமானார்.
பழனி அருகே பாலசமுத்திரம்-பாலாறு பொருந்தலாறு அணை பிரதான சாலையில் பண்ணை வீட்டில் வசிப்பவர் நாராயணசாமி நாயுடு மனைவி தனுஸ்வரி(36). நாராயணசாமியின் இரண்டாவது மனைவியான இவருக்கு துளசி சியாமளா(13) என்ற மகள் உள்ளார். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் நாராயணசாமி இறந்து விட்ட நிலையில் தோட்டம், வயல்களை பராமரித்து வந்த தனுஸ்வரி பழனி அருகே வி.கே.மில்ஸ் பகுதியில் தனியார் பிரைமரி பள்ளியை நடத்தி வந்துள்ளார். இவரது வீட்டின் கார் டிரைவர் காளீஸ்வரன்(28). வெள்ளக்கோயிலை சேர்ந்த இவர் பாலசமுத்திரத்திலேயே வீடு பிடித்து தங்கியுள்ளார்.
தனுஸ்வரியின் உறவினர் வீரமணி மகன் செந்தில்குமார்(40). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 13 வருடங்களுக்கு முன்னரே மனைவியை விவாகரத்து செய்து விட்டு தனியே பைனான்ஸ் செய்து வருகிறார். தனுஸ்வரியின் வீட்டுக்கு அடிக்கடி வந்த செந்தில்குமாருக்கும், தனுஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளியின் கட்டிட செலவுக்காக தனுஸ்வரியும், செல்வக்குமாரும் வெள்ளிக்கிழமை பழனியில் வங்கியில் இருந்து ரூ.23 இலட்சத்தை எடுத்து வந்து வீட்டில் வைத்துள்ளனர்.
சனிக்கிழமை காலை வீட்டுக்கு வந்த பணியாளர்கள் வீட்டில் காரும், துளசி சியாமளாவும் இல்லாததால் வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டின் படுக்கையறையில் தனுஸ்வரியும், செல்வக்குமாரும் கழுத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்ததை பார்த்து உடனடியாக பழனி தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து பார்த்த போது கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அரிவாள் அருகேயே இருந்தது தெரியவந்தது.
தகவலறிந்த திண்டுக்கல் எஸ்.பி., ஜெயச்சந்திரன் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர் குழு, தடவியல் நிபுணர்களுடன் வந்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், மோப்பநாய் கொண்டு வரப்பட்டு ஆய்வுகள் நடைபெற்றது. ஆய்வின் போது வீட்டில் வங்கியில் இருந்து கொண்டு வந்த பணம் ரூ.23 லட்சம் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. மேலும், அவர்கள் வீட்டு கார் டிரைவர் காளீஸ்வரன், சிறுமி துளசி சியாமளா ஆகியோரும், சுமார் 9 இலட்சம் மதிப்புள்ள சைலோ காரும் காணமல் போனதும் கண்டுபிடிக்கப்பட்டது. காளீஸ்வரனின் செல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் எங்கு போயுள்ளனர் என்பது மர்மமாக உள்ளது.
தனுஸ்வரியின் நகைகள் அப்படியே உள்ள நிலையில் நடைபெற்ற கொலை புரியாத புதிராக உள்ளது. தனுஸ்வரி, செல்வகுமாரை கொலை செய்த நபர்கள் சிறுமி, டிரைவரை கடத்தி சென்றனரா அல்லது டிரைவரே கொலை செய்து பணத்தை திருடிக்கொண்டு சிறுமியை கடத்தி சென்று விட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை சம்பவம் குறித்து பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர்களின் சடலம் பழனி அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனக்காக கொண்டுவரப்பட்ட நிலையில் ஏராளமான நண்பர்கள், உறவினர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...