/

திருச்சி அருகே ஆடுகள் ஏற்றிச் சென்ற மினிலாரி மீது லாரி மோதல்: 2 பேர் பலி

திருச்சி அருகே ஆடுகளை ஏற்றிக் கொண்டு சென்ற மினி லாரி மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயம் அடைந்தனர்.

News image
Updated On :22 மார்ச் 2014, 6:00 am

சண்முகம்

திருச்சி அருகே ஆடுகளை ஏற்றிக் கொண்டு சென்ற மினி லாரி மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயம் அடைந்தனர்.

திருச்சியைச் சுற்றியுள்ள மருங்காபுரி, மாங்காலிப்பட்டி, விராலிமலை பகுதிகளில் இருந்து ஆடுகளை ஏற்றிக் கொண்டு சமயபுரம் சந்தைக்கு விற்பதற்காக, இன்று காலை சிலர் மினி லாரியில் வந்தனர்.

அந்த லாரி நாகமங்கலம் அருகே வந்தபோது, பின்னால் வந்த லாரி இதன் மீது மோதிவிட்டுச் சென்றுவிட்டது. இதில் மினி லாரி விபத்துக்கு உள்ளானது. இதில், பயணம் செய்த

கணேசன், சக்தி வேல் என்ற இருவர் உயிரிழந்தனர். 23 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து, மணிகண்டம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.