ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த முதலை!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிவாயம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு முதலை ஒன்று ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துவதாக வனத்துறையினருக்கு

News image
Updated On :23 மார்ச் 2014, 10:58 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் சிவாயம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஊருக்குள் புகுந்த 7 அடி நீள முதலையை வனத்துறையினர் பிடித்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிவாயம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு முதலை ஒன்று ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துவதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் தலைமையில் களப்பணியாளர்கள் விரைந்து சென்று சுமார் 7 அடி நீளமுள்ள, சுமார் 600 கிலோ எடை கொண்ட முதலையை பிடித்து கட்டிப்போட்டனர். பின்னர் மினிலாரி மூலம் முதலையை அருகாமையில் உள்ள வாக்காரமாரி குடிநீர் தேக்க ஏரியில் கொண்டு பாதுகாப்பாக விடப்பட்டது. இதே சிவாயம் கிராமத்தில் கடந்த மார்ச் 19-ம் தேதி நீரின்றி உள்ள வடக்குராஜன் வாய்க்காலில் பொதுமக்களை அச்சுறுத்திய 10 அடி நீள ராட்சத முதலையை வனத்துறையினர் பிடித்தனர்.

இந்த வாரத்தில் இதுவரை பொதுமக்களை அச்சுறுத்திய 3 முதலைகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.