ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சிதம்பரம் தொகுதியில் போட்டியிட அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு

சிதம்பரம் ஏ.எஸ்.சத்தார் வளாகத்தில் எஸ்.ஏ.டாங்கேவால் உருவாக்கப்பட்ட அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயற்குழுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி மாநில செயலாளர் கே.

News image
Updated On :23 மார்ச் 2014, 2:37 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது என முடிவு செய்துள்ளது.

சிதம்பரம் ஏ.எஸ்.சத்தார் வளாகத்தில் எஸ்.ஏ.டாங்கேவால் உருவாக்கப்பட்ட அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயற்குழுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி மாநில செயலாளர் கே.கணேசன் தலைமை வகித்தார். காரைக்கால் மாவட்டச் செயலாளர் எஸ்.கலியபெருமாள் முன்னிலை வகித்தார். கட்சி பொதுச்செயலாளர் ஜி.பூராசாமி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கே.சி.காமராஜ், எஸ்.பவுன்ராஜ், ஆர்.அலெக்சாண்டர், ஏ.ஆரோக்கியசாமி, பி.அந்தோணிராஜ், கே.பாலு, கே.ஸ்ரீதரன், பி.முனுசாமி, கே.வெண்மணி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

கூட்டத்தில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில், கட்சி தேசிய அமைப்பு செயலாளர் ஜி.பூராசாமியை வேட்பாளராக அறிவித்து போட்டியிடுவது என்றும்,  அதனடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி ஆதவை பெறுவது என்றும், இடது சாரி கட்சிகள் போட்டியிடும் புதுச்சேரி, நாகை, கடலூர் உள்ளிட்ட தொகுதிகளில், அக்கட்சி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபது என தீர்மானிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.