நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாமக வேட்பாளரை திரும்ப பெற ராமதாசுடன் பேச்சு: ரங்கசாமி

புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவர் திங்கள்கிழமை கூறியதாவது:புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் எங்கள் கட்சி வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தான் போட்டியிடுகிறார்.

News image
Updated On :24 மார்ச் 2014, 11:34 am

சுஜித்குமார்

புதுச்சேரியில் பா.ம.க. வேட்பாளரை திரும்பப் பெறச் செய்வது குறித்து அக்கட்சித்தலைவர் ராமதாசுடன் பேச்சு நடத்தப்படும் என அம்மாநில முதல்வரும் , என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவர் திங்கள்கிழமை கூறியதாவது:புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் எங்கள் கட்சி வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தான் போட்டியிடுகிறார். இதை பா.ஜ.க. தலைவர்களும் உறுதி செய்துள்ளனர்.

பா.ம.க. வேட்பாளர் அனந்தராமனை தேர்தலில் இருந்து திரும்பப் பெறச் செய்வது தொடர்பாக அக்கட்சித் தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் விரைவில் பேச்சு நடத்த உள்ளேன்.

என்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெற கூட்டணி கட்சிகள் முழுமையாக ஆதரித்து தேர்தல் பணிபுரிய வேண்டும். விரைவில் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும்.கூட்டணி கட்சிகளோடு இணைந்து பிரசாரம் செய்வதற்கான பணிகள் விரைவில்தொடங்கும் என்றார்.  தனது அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி படம்தொடர்ந்து மாட்டப்பட்டிருப்பது குறித்த எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.