பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து பள்ளி மாணவர் சாவு
உளுந்தூர்பேட்டை வட்டம் சேந்தநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவரது மகன் ஆறுமுகம்(16) உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சனிக்கிழமை பள்ளி


விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை நகர் ரயில்வே மேம்பாலத்தில் பஸ்ஸிலிருந்து தவறி விழுந்ததில் பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
உளுந்தூர்பேட்டை வட்டம் சேந்தநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவரது மகன் ஆறுமுகம்(16) உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சனிக்கிழமை பள்ளி முடிந்து அரசு பஸ் தடம் எண் 5-ல் வீட்டிற்கு செல்லும்பொழுது பஸ்ஸின் பின் படியில் நின்றுகொண்டு சென்றதால் உளுந்தூர்பேட்டை ரயில் மேம்பாலத்தில் செல்லும்பொழுது பஸ்ஸிலிருந்து தவறி பாலத்தில் விழுந்து படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த ஆறுமுகத்தை உடனடியாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...