தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பண்ருட்டி அருகே தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடும் கிராமத்தினர்

பண்ருட்டி ஒன்றியம் எஸ்.ஏரிப்பாளையம் கிராமம. இக்கிராமத்தில் 1800க்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன.இக்கிராமம் தெருவத்தூர் மற்றும் சேமகோட்டை ஆகிய ஊராட்சிகளில் உள்ளது. இதனால்

News image
Updated On :25 மார்ச் 2014, 10:27 am

சீனிவாசன்

பண்ருட்டி அருகே எஸ். ஏரிப்பாளையம் கிராமத்தினர் நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிப்பதாக கூறி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பண்ருட்டி ஒன்றியம் எஸ்.ஏரிப்பாளையம் கிராமம. இக்கிராமத்தில் 1800க்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன.இக்கிராமம் தெருவத்தூர் மற்றும் சேமகோட்டை ஆகிய ஊராட்சிகளில் உள்ளது. இதனால் இக்கிராமத்தினருக்கு எந்த வசதியும் கிடைக்கவில்லை. அரசின் நலதிட்டமும் கிடைக்கவில்லை. மேலும் உள்ளாட்சி பிரதிநிதிகளான மேற்கண்ட் இரு பகுதியை சேர்ந்தவர்களே வரகூடிய நிலையும் உள்ளது.

இதனல் எஸ்.ஏரிப்பாளையத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க பல ஆண்டுகளாக மக்கள் வலியுறுத்தி வந்தனர்.ஆனால் இதுவரை நடவடிகை எடுக்கவில்லை.இந்நிலையில் கடந்த 2 நாட்கள் முன்பு ஊர் பொதுக்கூட்டம் கூட்டி நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது என்று முடிவு செய்தனர்.நேற்று(திங்கள்) ஊர்மக்கள் கடலூர் ஆட்சியரை அணுகி மனு கொடுக்க சென்றனர். ஆட்சியரை சந்திக்க முடியாததை அடுத்து நேர்முக உதவியாளரிடம் மனுவை கொடுத்து, பின் அர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் திங்கள் இரவு கிராம பகுதியில் உள்ள சுவர்களில் செய்யப்பட்டிருந்த அனைத்து கட்சி சுவர் விளம்பரங்களையும் அழித்தனர்.இன்று காலை வீடுகளில் கருப்பு கொடி ஏற்று தங்கள் எதிப்பை தெரிவித்தனர். இத்தகவலை அறிந்த குறிஞ்சிபாடி சட்டபேரவை தொகுதி உறுப்பினர் சரத்தூர் இரா ராஜேந்திரன், நெய்வேலி சட்ட மன்ற உறுப்பினர் எம்.பி.எஸ்.சிவசுரமணியன், மாவட்ட திட்டகுழு உறுப்பினர் தேவநாதன்,அட்மா குழு தலைவர் தெருவத்தூர் ராஜேந்திரன் எஸ் கிராமத்துக்கு சென்று மக்களிடம், பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் ஏரிபாளையத்தை தனி ஊராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். எனினும் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டவில்லை. இதை தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்துவது என மக்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.