ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சிதம்பரம் அருகே ஆயுதப்படை காவலரை தாக்கிய இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் மீது வழக்குப்பதிவு

சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூரைச் சேர்ந்த முன்னாள் சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஜினிகாந்த். இவர் புதன்கிழமை காலை சி.முட்லூரிலிருந்து வயலுக்கு மோட்டார்

News image
Updated On :26 மார்ச் 2014, 2:15 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே ஆயுதப்படை காவலரை தாக்கிய இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் மீது கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூரைச் சேர்ந்த முன்னாள் சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஜினிகாந்த். இவர் புதன்கிழமை காலை சி.முட்லூரிலிருந்து வயலுக்கு மோட்டார் சைக்கிளில் செல்போன் பேசிக்கொண்டு வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் சென்ற அரசு கலைக்கல்லூரி மாணவி மீது மோதியதாக தெரிகிறது. அப்போது அவ்வழியே வந்த நெடுஞ்சாலை ரோந்து காவல் படையில் பணியாற்றும் ஆயதப்படைக் காவலர் நடராஜன் (31), ரஜினிகாந்த் மற்றும் அவருடன் வந்த இருவரிடம் பார்த்து வந்தால் என்ன என கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு காவலர் நடராஜனை, மூவரும் ஆபாசமாக திட்டு தள்ளி விட்டதாகக் கூறப்படுகிறது இதில் காவலர் நடராஜனுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. பின்னர் அப்பகுதி மக்கள் இருவரையும் சமரசப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து சிதம்பரம் கொத்தங்குடித்தெருவைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் நடராஜன், கிள்ளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கிள்ளை போலீஸார் ரஜினிகாந்த் மற்றும் 2 பேர் மீது போலீஸாரை ஆபாசமாக திட்டி பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.