ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

புகழ்பெற்ற திருப்பாற்கடல் தீர்த்த குளத்தை தூர்வார கோரிக்கை

சிதம்பரம் நகரில் வேங்கான்தெருவில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருப்பாற்கடல் குளத்தை ஆக்கிரமிப்பை அகற்றி வேலி அமைத்ததை பாராட்டுகிறோம். மேற்கண்ட குளத்தில் மழைநீரை சேமித்து, நீர்நிலையை

News image
Updated On :26 மார்ச் 2014, 12:37 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் உள்ள புகழ்பெற்ற திருப்பாற்கடல் தீர்த்தகுளத்தை தூர்வாரி, சுத்தம் செய்ய வேண்டும் என தமிழத் தேசப் பொதுவுடைமைக்கட்சி உதவிஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சி நகரச் செயலாளர் கு.சிவப்பிரகாசம், சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்திடம் அளித்துள்ள மனு விபரம்:

சிதம்பரம் நகரில் வேங்கான்தெருவில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருப்பாற்கடல் குளத்தை ஆக்கிரமிப்பை அகற்றி வேலி அமைத்ததை பாராட்டுகிறோம். மேற்கண்ட குளத்தில் மழைநீரை சேமித்து, நீர்நிலையை மேம்படுத்த மழைக்காலம் தொடங்கும் முன்பே, அரசு செலவில் தூர்வார வேண்டும். மேலும் உடனடியாக தூர்வாரி, நீர்நிலையை பாதுகாக்க கேட்டுக்கொள்கிறோம்.

தூர்வாரும்போது எடுக்கப்படும் மண்ணை அப்புறப்படுத்துவதில் அரசு நிர்வாகம் தயக்கம் காட்டுவதாக அறிகிறோம். மண் அப்புறப்படுத்துவதில் உள்ள சட்ட சிக்கல்களை உரிய முறையில் எதிர் கொண்டு சட்டத்திற்கு உட்பட்ட வகையிலேயே மண்ணை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறுஅப்புறப்படுத்தினால்தான் தூர்வாரும் பணி முழுமையாக நிறைவேறி நீர்பிடிப்பு பகுதியாக திருப்பாற்கடல் குளம் மீட்கப்படும். எனவே உடனடியாக திருப்பாற்கடல் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என மனுவில் கூறியுள்ளார் கு.சிவப்பிரகாசம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.