தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காங்கிரஸ் மனம் வருந்தினால் ஆதரிப்போம்: கருணாநிதி

சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளான மத்திய சென்னை, வடசென்னை, தென்சென்னை தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து சென்னை

News image
Updated On :26 மார்ச் 2014, 2:11 pm

வேல்முருகன்

சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளான மத்திய சென்னை, வடசென்னை, தென்சென்னை தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து சிந்தாரிப்பேட்டையில் திமுக தலைவர் கருணாநிதி பிரசாரம் மேற்கொண்டார்.

அவர் பேசியதாவது:;  மதச்சார்பற்ற அரசை காண வேண்டும் என திமுக பாடுபடுகிறது திராவிடர்களை ஒன்றுபடுத்தி அவர்களின் முன்னேற்றத்திற்கு உழைப்பது திமுக/ தொண்டர்களை சந்திப்பதில் எனக்கு இறுமாப்பு இல்லை சோதனை, வேதனைகளை கடந்து சாதனை புரிவதாக திமுக விளங்கவேண்டும்  இந்த சிந்தாதிரி பேட்டையில் , அண்ணாவும், நாங்களும் சேர்ந்து பல கூட்டங்களில் சந்தித்துள்ளோம்.

 அண்ணா, பெரியார் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தின் கூட்டத்தை இங்கு நடத்துகிறோம். எப்போதும் எங்களுக்கு நினைவுக்கு வருவது இந்த சிந்தாதிரி பேட்டை தான். இங்கே சிந்தாமல், சிதறாமல் எடுத்து சொல்லும் தமிழ்சான்றோர்கள், தமிழ் விரும்பிகள் ஆகியோர், தங்களின் மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதே நமது நோக்கம். காங்கிரஸ் மனம் வருந்தினால் ஆதரிப்போம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.