புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து: தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதி; செயலிழந்த முதல்வர் என ரங்கசாமி மீது தாக்கு
அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு மத்தியில் அமைந்தால் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா


அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு மத்தியில் அமைந்தால் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதி கூறியுள்ளார்.
புதுச்சேரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஓமலிங்கத்தை ஆதரித்து உப்பளம் துறைமுக மைதானத்தில் வியாழக்கிழமை தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற முதல்வரும், பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பேசியதாவது:
இந்திய பொருளாதாரத்தை சீரழித்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை மக்கள் தூககி எறிய வேண்டும். இத்தேர்தல் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் தேர்தல், மக்களாட்சியை நிலைநாட்டும் தேர்தல். ஊழல், கொடுங்கோல் ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மக்களாட்சி மலர வேண்டும். மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சி அமைய வேண்டும். அப்போதுதான் உங்கள் கோரிக்கைகள் வென்றெடுக்கப்படும். இதனடிப்படையில் அதிமுக வேட்பாளர் ஓமலிங்கத்தை மகத்தான வெற்றி பெற செய்யவேண்டும்.
துரோகம் இழைத்த ரங்கசாமி
கடந்த 2011-ம் ஆண்டு பேரவை தேர்தலில் அதிமுக மற்றும் என்ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி நான் கோரினேன். அதன்படி நீங்கள் வாக்களித்தீர்கள். அதிமுக மற்றும் என்ஆர். கூட்டணி வேட்பாளர்களை மகத்தான வெற்றி பெறசெய்தீர்கள்.
என் ஆர்.காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மை பெறவில்லை. அதிமுகவை புறக்கணித்துவிட்டு சுயேச்சை ஆதரவுடன் ஆட்சியமைத்தார் ரங்கசாமி. என் வேண்டு காளை ஏற்று வாக்களித்த உங்கள் எண்ணத்திற்கு முற்றிலும் மாறாக அவர் நடந் துகொண்டார். அவர் அதிமுகவிற்கு மட்டும் துரோகம் இழைக்கவில்லை, உங்களுக்கும் துரோகம் இழைத்துவிட்டார்.
புதுவை மக்களுக்கும் தமிழக திட்டங்களின் பயன்:
அதிமுக ஆதரவுடன் புதுச்சேரியில் ஆட்சி அமைந்திருந்தால் தமிழகத்தில் வழங்கப்படும் திட்டங்களான தாலிக்கு தங்கம், விலையில்லா மிக்சி, பேன், கிரைண்டர், பசுக்கள், ஆடு வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள் வழங்கும் திட்டம், பசுமை வீடுகள் திட்டம், நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் திட்டம் என எண்ணற்ற திட்டங்கள் உங்களை வந்தடைந்திருக்கும்.
இத்திட்டங்களின் பயன்களை தமிழக மக்கள் அனுபவிக்கின்றனர். என்.ஆர் காங்கிரஸ் அரசால் உங்களுக்கு ஏதாவது நன்மை விளைந்துள்ளதா இல்லை. தேர்தல் வாக்குறுதியானாலும் சரி, சட்டமன்ற அறிவிப்புகளும் புதுச்சேரி அரசில் காகித வடிவில் உள்ளது.
இங்கு எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. உள்கட்டமைப்பு சீரமைக்கப் படவில்லை. சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காரைக்கால் மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் போது என்ஆர்.காங்கிரஸ் அரசு ஏதாவது குரல்கொடுத்துள்ளதா தமிழகத்தில் மீனவர்கள் சிறைபிடித்து செல்லப்படும்போது நான் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டேன். தமிழக மீனவர்கள் விடுதலையாகும்போதுகாரைக்கால் மீனவர்களும் எனது முயற்சியால் விடுதலையாகி வருகின்றனர்.
மீனவர்களை கடத்தும் இலங்கை அரசுக்கு எதிராக என்ஆர்.காங்கிரஸ் குரல் கொடுத்துள்ளதா சட்டசபையில் இலங்கையை கண்டித்து ஒரு தீர்மானமாவாது நிறைவேற்றியுள்ளாதா கடந்த 2012-13-ல் திட்ட செலவினங்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடியை மத்திய திட்டக்குழு அனுமதித்தது. நடப்பாண்டில் ரூ.2 ஆயிரம் கோடி மட்டுமே திட்டக்குழு அனுமதித்துள்ளது. கடந்த ஆண்டைவிட 33 சதவீத நிதி குறைவாக அனுமதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி குறைந்துள்ளது இதன்மூலம் தெளிவாக தெரிகிறது.
பல பிரச்னைகளில் புதுச்சேரி மக்களின் உணர்வை மத்திய அரசிடம் எடுத்துக்கூற தவறியது என்ஆர் காங்கிரஸ் அரசு. மத்திய அரசின் தவறுகளை என்ஆர் அரசு தட்டிக்கேட்கவில்லை, மக்கள் நலனில் அக்கறையில்லாத அரசா உள்ள என்ஆர் காங்கிரஸ் வேட்பாளரை நீங்கள் துக்கி எறிய வேண்டும். செய்வீர்களா
மத்திய அரசின் மக்கள் விரோத திட்டத்திற்கு ஆதரவாக, வாய்மூடி மவுனமாக இருப்பவர் புதுச்சேரி முதல்வர். ஜிப்மரில் 5 ஆண்டிற்கு முன்பு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது வருமான உச்சவரம்பை ஜிப்மர் நிர்வாகம் நிர்ணயித்துள்ளது. இதனால் ஏழைமக்கள் அவதிப்படுகின்றனர். இதை கண்டித்து அதிமுகதான் ஆர்பாட்டம் நடத்தியது. இருப்பினும் இதை கைவிட காங்கிரஸ் முன்வரவில்லை. என் ஆர்.அரசும் கண்டுகொள்ளவில்லை. காங்கிரசையும், என் ஆர்.காங்கிரசையும் வரும் தேர்தலில் மக்கள் தோல்வியுறச்செய்ய வேண்டும். சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு புகுத்தப் பட்டதற்கு என் ஆர்.அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதற்கு திமுக ஆதரவு அளித்தது. எனவே காங்கிரஸ், திமுக, என் ஆர்.காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் வரும் தேர்தலில் எழுந்திரு க்க முடியாதபடி மரண அடி கொடுக்க வேண்டும்.
புதுச்சேரி மக்கள் பலவீனமான செயலிழந்த முதல்வரை பெற்றுள்ளனர். வளர்ச்சியில் பி ன்னோக்கி செல்லும் மாநிலமாக புதுச்சேரி திகழ்கிறது. 2011ல் மக்கள் விரோத காங்கிரசை அகற்ற வேண்டும் என கோரினேன். தற்போது மத்திய காங்கிரஸ் அரசை அகற்ற வேண்டும். என்ஆர் காங்கிரஸ், திமுகவை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் வந் துள்ளேன். இதை மக்கள் நிறைவேற்ற வேண்டும்.
வேடிக்கை பார்த்த மத்திய அமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரியை சேர்ந்த நாராயணசாமி மத்திய அமைச்சராக இருந்தும் தொழில்வளர்ச்சியில் புதுச்சேரி எந்த முன்னேற்றமும் காணவில்லை. ஏஎப்டி ஆலை மூடப்பட்டுள்ளது. சுதேசி மில், பாரதி மில், காரைக்கால் ஜெயபிரகாஷ் நாரயண் மில் நலிந்துள்ளது. நலிந்த ஆலைகளை நவீனப்படுத்தவும், மூடிய ஆலைகளை திறக்கவும், வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் நாராயணசாமி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாநில அந்தஸ்தை பெற்றுத்தர எந்த நடவடிக்கையாவது அவர் எடுத்தாரா நீண்ட கால கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுத்தாரா மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்க்க நடவடிக்கை எடுத்தாரா
புதிய தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தாரா விமானநிலையத்தை விரிவாக்கம் செய்தாரா திண்டிவனம், கடலுருக்கு ரயில் பாதை அமைத்தாரா துறைமுக அபிவிருத்தி திட்டம், சிறப்பு பொருளாதார மண்டலம் கொண்டுவந்தாரா சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியா ரயில் பாதை அமைத்தாரா மாநில வளர்ச்சிக்காக வளர்ச்சிக்கு கூடுதல் நிதி பெற்றுத்தந்தாரா இல்லை. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தும் எதையும் பெற்றுத்தர இயலாத கட்சி காங்கிரஸ் கட்சி. அவர்களுக்கு தங்கள் வளர்ச்சியில்தான் அக்கறை. உங்கள் வளர்ச்சியில் அக்கறை இல்லை.
ஒரிசாவில் நிலக்கரி எடுக்க அனுமதி வழங்கியதில் நியாயமாக செயல்பட்டிருந்தால் புதுச் சேரி வளர்ச்சி பெற்றிருக்கும். அதை செய்ய தவறிய காங்கிரஸ், திமுக, என்ஆர்.கா ங்கிரசுக்கு மக்கள் மரண அடி கொடுக்க வேண்டும். இந்த கட்சிகளை வீழ்த்துவது நம் ஜனநாயக கடமை. புதுச்சேரி வளர்ச்சிப்பாதையில் செல்ல, மாநில அந்தஸ்து கிடைக்க மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை. அதற்கு அதிமுகவின் கரங்களை வலுப்படுத்த வண்டும்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என 1998-ல் பா.ஜ.க. ஆட்சியில் பிரதமரை வலியுறுத்தி தனி மாநில அந்தஸ்து வழங்கப்படும் என பிரதமர் பார்லிமெண்டில் அறிவித்தார். பத்திரிகையிலும் அந்த செய்தி வெளிவந்தது. ஆனால் பின்னர் வந்த ஆட்சி மாற்றத்தால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சி அமைந்தால், புதுச்சேரி மாநில மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் தனி மாநில அந் தஸ்து பெற்றுத்தரப்படும் என உறுதியுடன் தெரிவிக்கிறேன்.
அனைத்து பிராந்தியங்களமும் சம வளர்ச்சி பெற, ரூ.5 ஆயிரம் கோடி மத்திய கடனை ரத்து செய்ய, மத்திய வரி வருவாயை புதுச்சேரிக்கு தனியாக பிரித்து வழங்க, நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்க்க, விமான நிலையத்தை நவீனப்படுத்த, தொழிற்சாலைகளை அமைத்து வேலைவாய்ப்பு உருவாக்க, ஆலைகளை நவீனப்படுத்த, நெசவாளர்களுக்கு அனைத்து வசதிகள் கிடைக்க, பிரெஞ்சு கட்டடங்களை புதுப்பிக்க, இந்திய ராணுத்தை நவீனமயமாக்க, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச்செல்ல, ஏற்றுமதியை உருவாக்க, விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த, மீனவர்கள் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தமிழை ஆட்சிமொழியாக்க, உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்க, நாட்டின் பல்வேறு ஊழல்களுக்கு காரணமானவர்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத்தர, பெட்ரோல், டீசல் விலை நிர்ணய கொள்கையை மாற்ற, தனி நபர் வருமானம் ரூ.5 லட்சம் ஆகவும் அதிமுக மத்தியில் அங்கம் வகிக்க வேண்டும். அப்படி ஆட்சி அமைந்தால் நாட்டின் தனிநபர் வருமான உச்சவரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படும்.
தமிழக, புதுச்சேரி மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும். கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு அமைதி, வளம், வளர்ச்சி ஏற்படுத்தப்படும் என்றார் ஜெயலலிதா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...