அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகரில் அதிமுகவிற்கு உள்ள வரவேற்பை பார்த்து அச்சத்தில் உள்ள எதிரணியினர்: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

விருதுநகர் மக்களவை தொகுதி கிராமங்களில் அதிமுக வேட்பாளருக்கு உள்ள வரவேற்பை பார்த்து எதிரணியினர் அச்சம் அடைதிருப்பதாக செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.

News image
Updated On :27 மார்ச் 2014, 11:36 am

விருதுநகர் மக்களவை தொகுதி கிராமங்களில் அதிமுக வேட்பாளருக்கு உள்ள வரவேற்பை பார்த்து எதிரணியினர் அச்சம் அடைதிருப்பதாக செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

    விருதுநகரில் அதிமுக கட்சி அலுவலகத்தின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் தலைமை வகித்தார். சட்டப்பேரவை தொகுதி செயலாளர் கி.கலாநிதி, இணைச்செயலாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கட்சி அலுவலகத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: இத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் செல்கிற இடங்களில் எல்லாம் கிராம மக்கள் நல்ல  வரவேற்பு கொடுக்கின்றனர். இதைப்பார்த்து திமுக வேட்பாளர் கலக்கத்திலும், 

பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் வைகோ மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஆகியோர் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். சிங்கள கடற்படையினாரால் ஏற்படும் மீனவர், கச்சத்தீவு ஆகியவைகளை இந்திய பிரச்னைகளாக காங்கிரஸ் பார்ப்பதில்லை.

     இதுவரையில் எம்.பியாக இருந்த மாணிக்கம் தாகூர் பொதுமக்களுக்காக சாலையோரங்களில் பயணிகள் நிழற்குடைகளை கட்டியுள்ளார். தொகுதியில் பெரிய அளவில் திட்டங்கள் கொண்டு வரவில்லை. திமுக-காங்கிரஸ் கூட்டணி முறிவுக்கு தமிழ்மொழி பற்று எல்லாம் காரணம் அல்ல. கனிமொழியை வழக்கில் இருந்து விடுவிக்காததுதான் காரணம். தற்போது, கருணாநிதி நிரந்தரமாக அழகிரியை நீக்கம் செய்து விட்டதாக சொல்கிறார்கள். ஆனால், திமுகவில் இருப்பதாக கூறி மீண்டும்  சென்னைக்கு கருணாநிதியை பார்க்க போகிறார்.

   இதேபோல், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு திமுக ஆதரவு தெரிவித்தனர். தற்போது, மக்களவை தேர்தல் அறிக்கையில் சில்லறை வர்த்தகத்துக்கு எதிர்ப்பு என முரண்பாடன தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். அதனால் பொதுமக்கள் சிந்தித்து பார்த்து அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுங்கள் என பொதுமக்களை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கேட்டுக்கொண்டார்.

     இந்நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் சக்திகோதண்டம், விருதுநகர் நகராட்சி தலைவர் மா.சாந்தி, நகர செயலாளர் முகமது நயினார், ஒன்றியக்குழு துணைத்தலைவர் மூக்கையா மற்றும் வேட்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.