ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது: தொல்.திருமாவளவன்

தமிழர் விரோத நடவடிக்கைகளினால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

News image
Updated On :28 மார்ச் 2014, 2:07 pm

ஜி.சுந்தரராஜன்

தமிழர் விரோத நடவடிக்கைகளினால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது ராஜபட்சே தலைமையிலான இலங்கை அரசு போர்குற்றம் மற்றும் மனிதஉரிமைகள் மீறல்களில் ஈடுபட்டுள்ளது குறித்து சுதந்திரமான சர்வதேச புலாணாய்வு விசாரணை நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் புலாணாய்வு விசாரணை ஆணையம் அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்தை அமெரிக்கா உள்ளிட்ட 23 நாடுகள் ஆதரித்து வாக்களித்து வெற்றி பெறச்செய்துள்ளது. ஆனால் இந்தியா உள்ளிட்ட 11 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளது. இந்தியஅரசின் இச்செயல், தமிழினத்திற்கு விரோதமான செயல். இதை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.

திரைப்பட இயக்குநர் முத்துசாமி இயக்கிய இனம் திரைப்படத்தில் சிங்களர்களையும், பெளத்துவர்களையும் மனித நேயம் மிக்கவர்களாகவும் சித்தரித்துள்ளது. தமிழர்களை, குறிப்பாக விடுதலைப் புலிகளை வன்முறையாளர்களாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்தரித்துள்ளது. இந்த இனம் படத்தை திரையிடக்கூடக்கூடாது. உடனே தமிழகஅரசு இனம் படத்தை திரையிடுவதை தடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழர்கள் உணர்வுகளை காயப்படுத்தும், காட்சிகளை அந்த இயக்குநர் அப்புறப்படுத்த வேண்டும். படம் முழுவதும் அது எதிரொலித்தால் படத்தை அவர் திரையிடக்கூடாது என திருமாவளவன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.