ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கடலூர் தொகுதியில் 'யூனியன் பார்ட்டி ஆஃப் இந்தியா' கட்சி தலைவர் ஸ்ருதி மிஸ்ரா போட்டி

சிதம்பரம் மாரியப்பாநகரைச் சேர்ந்த 27 வயது பொறியியல் பட்டதாரியான ஸ்ருதி மிஸ்ரா, 'யூனியன் பார்ட்டி ஆஃப் இந்தியா' என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். சமுதாயப் பணிக்காக இவர் தனது

News image
Updated On :29 மார்ச் 2014, 9:42 am

ஜி.சுந்தரராஜன்

கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் 'யூனியன் பார்ட்டி ஆஃப் இந்தியா' கட்சி தலைவர் ஸ்ருதி மிஸ்ரா போட்டியிடுகிறார்.

சிதம்பரம் மாரியப்பாநகரைச் சேர்ந்த 27 வயது பொறியியல் பட்டதாரியான ஸ்ருதி மிஸ்ரா, 'யூனியன் பார்ட்டி ஆஃப் இந்தியா' என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். சமுதாயப் பணிக்காக இவர் தனது டிசிஎஸ் மென்பொருள் பொறியாளர் பணியை ராஜிநாமா செய்தார். மேலும் இவர் க்ருமிங் இந்தியா என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். மகாத்மாகாந்தி நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் உள்ள வேலையாட்களாகவும் பணியாற்றியுள்ளார். இவர் இதுவரை மூன்று ஆராய்ச்சிக்களுக்காக இந்திய காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளார். ஜெர்மன் உள்ளிட்ட 7 மொழிகளில் பேச வல்லவர்.

இவர் வெளியிட்டுள்ள தமிழக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நிலத்தடி நீர் சேமிப்பை அதிகரிப்பது, தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறையை நிவரத்தி செய்து, 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவது, இலங்கை தமிழ் இன மக்கள் வாழ்வுரிமைக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வது. தமிழ்நாட்டில் மதுவிற்பனையை குறைப்பது, கனிசமான அளவில் மதுஅடிமைகள் மறுவாழ்வு மருத்துவமனைகள் திறப்பது, அரசுப்பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுக்கொடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பது, ஹிந்தி கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கு வேண்டிய வசதியை செய்து கொடுப்பது, மற்ற மாநிலங்களில் உள்ள மக்களுக்கு தமிழ்மொழியை கற்றுக் கொடுப்பதற்கான மையங்களை திறப்பது.

தேசிய அளவிலான அறிக்கை: அனைத்து துறைகளில் வளர்ச்சி விகிதத்தை 12 சதவீதமாக அதிகரிப்பது, லஞ்சத்தை ஒழிப்பது, நிரந்தர பணியிட ஒதுக்கீட்டை 15 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்துவது, பள்ளிகளில் ஆங்கில மொழிகளின் முக்கியத்துவத்தையும், கல்வியின் தரத்தையும் உயர்த்துவது, அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்துவது, பெண்கள், குழந்தைகள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்குக்கான முன்னேற்றத்திற்கு முக்கியதுவம் அளிப்பது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.