நரேந்திர மோடியின் சாதனைகளைக்கூறி பிரசாரம் செய்து வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோருக்கு பாஜக மூத்த தலைவரும், தென் சென்னை தொகுதி வேட்பாளருமான இல. கணேசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியது:
தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பாமக தலைவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் சாதனைகளைக் கூறி பிரசாரம் செய்து வருகின்றனர். மோடி பிரதமர் ஆக வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி வருகின்றனர். இது பாஜகவைச் சேர்ந்த எங்களுக்கு பெருமையாக உள்ளது. இதற்காக அவர்களுக்கு பாஜக சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தேர்தல் பிரசாரத்தின்போது அதிமுக, திமுகவை பாஜகவினர் விமர்சிக்கவில்லை என சிலர் குற்றம்சாட்டுகின்றனர். நடப்பது மக்களவைத் தேர்தல். பிரதமராக வேண்டியது மோடியா ராகுல் காந்தியா என்பதை தீர்மானிப்பதற்கான தேர்தல்.
ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் நடக்கும் போட்டி போல சித்தரித்து மக்களை திசைதிருப்பி வருகின்றனர். காங்கிரûஸ ஆட்சியில் இருந்து அகற்றுவதே பாஜகவின் நோக்கம்.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது வருத்தம் அளிப்பதாக மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் கூறியிருக்கிறார். இது மக்களை ஏமாற்றும் செயல். இதனை மக்கள் நம்ப மாட்டார்கள்.
தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை வரவேற்கிறோம். அதே நேரத்தில் தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதிப்பதை ஏற்க முடியாது. டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜயகாந்த், வைகோ, அன்புமணி ராமதாஸ், பாரிவேந்தர், ஈஸ்வரன் ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர். உடல் நலம் சரியில்லாததால் டாக்டர் ராமதாஸ் பிரசாரம் செய்வது இன்னமும் முடிவாகவில்லை.
ராமதாஸின் விருப்பபடியே பாஜக கூட்டணி அமைந்தது.
தேர்தல் பிரசாரத்துக்கு மோடி, அத்வானி உள்ளிட்ட தலைவர்களின் பிரசாரப் பயணத் திட்டத்தை வகுக்க மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓரிரு தினங்களில் மோடி வரும் தேதியும், இடமும் அறிவிக்கப்படும் என்றார் இல. கணேசன்.
பேட்டியின்போது மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பழனியில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

மாணவியை கத்தியால் வெட்டியவா்களை கைது செய்ய வலியுறுத்தி மீஞ்சூா் காவல் நிலையம் முற்றுகை
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

