ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கேலி செய்ததை தட்டிக் கேட்ட முதியவர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனது பேத்தியை கேலி செய்த நபரை தட்டிக் கேட்ட முதியவரைத் தாக்கி காயப்படுதிய வழக்கில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :2 மே 2014, 8:33 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனது பேத்தியை கேலி செய்த நபரை தட்டிக் கேட்ட முதியவரைத் தாக்கி காயப்படுதிய வழக்கில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மகாராஜபுரம், முஸ்லீம் தெருவைச் சேர்ந்தவர் அ.அஜீஸ் (67). இவரது பேத்தியை இதே இடத்தைச் சேர்ந்த அக்பர் மகன் சித்திக்அலி, பாட்ஷா மகன் கனி ஆகியோர் கிண்டல் கேலி செய்து வந்துள்ளார்கள். இதனை அஜீஸ் தட்டிக் கேட்டுள்ளார்.

இதில் ஆத்திரமுற்ற இருவரும் மாவூத்து விலக்கு அருகே வந்து கொண்டிருந்த அஜூஸை வழிமறித்து கம்பால் அடித்து காயப்படுத்தியுள்ளார்கள்.இது குறித்து வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் அஜீஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சித்திக்அலியை கைது செய்தனர். கனியை தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.