ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நெல்லை அருகே கல்வெட்டான்குழியில் மூழ்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சாவு

திருநெல்வேலி அருகே சனிக்கிழமை கல்வெட்டான்குழியில் குளித்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மூழ்கி இறந்தார்.

News image
Updated On :3 மே 2014, 1:49 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி அருகே சனிக்கிழமை கல்வெட்டான்குழியில் குளித்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மூழ்கி இறந்தார்.

திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூரை சேர்ந்தவர் கருப்பையா மகன் மணிகண்டன் (18). நாகர்கோவிலில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வரும் மணிகண்டன், விடுமுறையை கழிப்பதற்காக திருநெல்வேலி அருகே மானூர் தெற்கு செழியநல்லூரில் உள்ள தனது நண்பர் இசக்கிமுத்து வீட்டுக்கு வந்தாராம்.

சனிக்கிழமை அங்குள்ள கல்வெட்டான்குழியில் இசக்கிமுத்து, மணிகண்டன் மற்றும்  சிலர் குளிக்க சென்றனாராம். அங்கு குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் சிக்கி கொண்ட மணிகண்டன் நீரில் மூழ்கி இறந்தார். மானூர் போலீஸார் மணிகண்டன் உடலை கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.