விருதுநகரில் தனியார் எலெக்ட்ரிக் பொருள்கள் விற்பனை நிலையத்தில் பூட்டை உடைத்து டி.வி மற்றும் வீடியோ கேமரா உள்ளிட்ட ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் கருமாதி மடம் பகுதியில் தனியார் டி.வி உள்பட எலெக்ட்ரிக் பொருள்கள் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வழக்கம் போல் சனிக்கிழமை விற்பனை முடிந்து இரவு பூட்டி விட்டுச் சென்றனர். இந்நிலையில் இக்கடையின் ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக ஞாயிற்றுக்கிழமை காலையில் மதுரையில் இருக்கும் விற்பனை நிலையத்தின் மேலாளர் கண்ணனுக்கு அப்பகுதியில் உள்ளோர் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதையடுத்து, விரைந்து வந்த விற்பனை நிலையத்தின் மேலாளர் ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று எலெக்ட்ரிக் பொருள்களை சரிபார்த்துள்ளார். அப்போது, முன்பகுதியில் இருந்த பெரிய அளவிலான எல்சிடி டி.வி மற்றும் வீடியோ கேமரா ஆகியவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும். உடனே இது தொடர்பாக விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் மேலாளர் கண்ணன் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து டி.வி மற்றும் கேமராவை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வலைதளங்களில் வைரலாகும் நாதக வேட்பாளரின் கையப்பமிட்ட பத்திரம்: அதில் அப்படி என்ன இருக்கிறது?

வாக்குப் பதிவு நாளில் சுற்றுலாத் தலங்கள் மூடல்!

இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 13% வீழ்ச்சி!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

