விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கோடை மழையால் அக்னியின் தாக்கம் இல்லை: நெல்லையில் குளு குளு சீசன்

கத்திரி வெயிலான அக்னி நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மூன்று வாரங்கள் நீடிக்கும் அக்னி

News image
Updated On :5 மே 2014, 12:42 pm

ஷேக் அப்துல்காதர்

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கோடை மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் இல்லை. குளு குளு சீசனை போன்ற சூழல் நிலவுகிறது.

கோடை வெப்பம் திருநெல்வேலி மாவட்டத்தில் 103 டிகிரியாக இருந்தது. இதனிடையே ஞாயிற்றுக்கிழமை கத்திரி வெயிலான அக்னி நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மூன்று வாரங்கள் நீடிக்கும் அக்னி நட்சத்திரத்தில் முதல் வாரத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும்.

இதனிடையே கடந்த சில தினங்களாக பெய்து வரும் கோடை மழையால் வெயில் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கியபோதிலும் வெயில் தாக்கம் இல்லை. இம்மாவட்டத்தில் குளு குளு சீசனை போன்ற சூழல் நிலவுகிறது.

திங்கள்கிழமை திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தென்காசி, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, முக்கூடல் பகுதியில் மிதமான மழையால் குளிர்ந்த காற்று வீசியது.திங்கள்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 2 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 1 மி.மீ மழையும் கருப்பாநதி அணையில் 10 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 32 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 4 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.