ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நகராட்சி குடிநீர் குழாய், மின் விளக்கு சேதப்படுத்திய வழக்கில் இருவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆராய்ச்சிபட்டி திரௌபதியம்மன்கோயில் தெரு பொது நடை பாதையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிலர் மது போதையில் சத்தம் போட்டுக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அப் பகுதியில்

News image
Updated On :5 மே 2014, 1:44 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் நகராட்சி குடிநீர் குழாய் மற்றும் தெரு மின் விளக்கை உடைத்து சேதப்படுத்திய வழக்கில் இருவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆராய்ச்சிபட்டி திரௌபதியம்மன்கோயில் தெரு பொது நடை பாதையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிலர் மது போதையில் சத்தம் போட்டுக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அப் பகுதியில் குடியிருந்து வரும் எல்.எஸ்.பி.சரவணன் என்பவர் ஏன் இப்படி என்று கேட்டுள்ளார். பொது நடைபாதையில் தான் சத்தம் போடுகிறோம். உங்களுக்கு என்ன என்று கூறி, சரவணனை அவர்கள் இழி சொற்களால் பேசியுள்ளார்கள். மேலும் அங்குள்ள நகராட்சி குடிநீர் குழாயை உடைத்துச் சேதப்படுத்தியதுடன், தெரு விளக்கையும் உடைத்துள்ளார்கள்.

இது குறித்து சரவணன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரைட்டன்பட்டி தெரு, அருந்ததியர் காலனியைச் சேர்ந்த தங்கசாமி மகன் முத்துமாரியப்பன் (23) மற்றும் குமார் மகன் முனியசாமி (22) ஆகியோரைக் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய காளி, முருகன் ஆகியோரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.