ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக முன்னாள் ராணுவ வீரர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர், மங்காபுரத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் அ.கணேசன் (46). இவருக்கும் வத்திராயிருப்பு, வணிக வைசியர் கீழத் தெருவைச் சேர்ந்த சந்திரா (40) என்பவருக்கும் 30.8.92-ல் திருமணம்

News image
Updated On :7 மே 2014, 12:30 pm

கோ.ஜெயக்குமார்

மனைவியிடம் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக அவரது கணவரான முன்னாள் ராணுவ வீரரை போலீஸார் புதன்கிழமை கைது செய்து செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், மங்காபுரத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் அ.கணேசன் (46). இவருக்கும் வத்திராயிருப்பு, வணிக வைசியர் கீழத் தெருவைச் சேர்ந்த சந்திரா (40) என்பவருக்கும் 30.8.92-ல் திருமணம் நடைபெற்று, கல்லூரியில் படிக்கும் இரு மகன்கள் உண்டு. திருமணத்தின் போது 10 பவுன் நகைகள் வரதட்சிணையாக கொடுத்தார்களாம். மேலும் 20 பவுன் நகை கூடுதல் வரதட்சிணை கேட்டு மனைவியை கணேசன் துன்புறுத்தினாராம். மேலும் கணேசன், 6 மாதங்களுக்கு முன்னர் கிருஷ்ணம்மாள் (எ) செல்வியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாராம்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சந்திரா புகார் செய்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கணேசனைக் கைது செய்தனர். மேலும் இவரது தாய் அன்னக்கொடி, சகோதரர்கள் ஆறுமுகம், பாஸ்கர், செல்வம் மற்றும் கணேசனின் இரண்டாவது மனைவி கிருஷ்ணம்மாள் (எ) செல்வி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து இவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.