15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சித்ரா பெளர்ணமி: கோயில்களுக்கு சிறப்புப் பேருந்து இயக்கப்படுகிறது

சித்ரா பெளர்ணமியையொட்டி (மே 14) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பல்வேறு திருக்கோயில்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Updated On :8 மே 2014, 3:49 am

சித்ரா பெளர்ணமியையொட்டி (மே 14) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பல்வேறு திருக்கோயில்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  வரும் 14-ம் தேதி சித்ரா பெüர்ணமி திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டம் மூலமாக 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர், ஆத்தூரிலிருந்து திருவண்ணாமலைக்கும், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர், சேலத்திலிருந்து பழனிக்கும், சேலத்திலிருந்து மேல்மருவத்தூருக்கும், சேலத்திலிருந்து மதுரை, மேட்டூரிலிருந்து மாதேஸ்வரன் மலைக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

 எனவே பொதுமக்கள், பயணிகள் அனைவரும் நெரிசலைத் தவிர்த்து இனிய பயணம் மேற்கொள்ளலாம் என்று போக்குவரத்துக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.