சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சுவாமி சகஜாநந்தர் நினைவு மற்றும் அயோத்திதாசப் பண்டிதர் நூற்றாண்டு கருத்தரங்கு

சிதம்பரம் ஓமக்குளம் நந்தனார் கல்விக்கழக அறக்கட்டளை மட வளாகத்தில் சுவாமி சகஜாநந்தர் நினைவு மற்றும் அயோத்திதாசப் பண்டிதர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

Updated On :8 மே 2014, 7:05 am

சிதம்பரம் ஓமக்குளம் நந்தனார் கல்விக்கழக அறக்கட்டளை மட வளாகத்தில் சுவாமி சகஜாநந்தர் நினைவு மற்றும் அயோத்திதாசப் பண்டிதர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

அயோத்திதாசப் பண்டிதர் – சுவாமி சகஜாநந்தர் ஆய்வு மையம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழக எஸ்.சி., எஸ்.டி பிரிவு ஆசிரியர், அலுவலர் மாணவர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கத்திற்கு ஏ.ஜி. மனோகர் தலைமை வகித்தார்.  செ.ஜெயப்பிரகாஷ் வரவேற்றார்.  மூத்த வழக்கறிஞர் பி.கோபாலக்கிருஷ்ணன்,  நந்தனார் கல்விக் கழக செயலாளர் டி.இராமமூர்த்தி,  அரிமா சங்கத் தலைவர்  பேராசிரியர் கே.வி.பாலமுருகன்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி .வி.பாலையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருத்தரங்கத்தில் ”தமிழக வரலாற்றில் அயோத்திதாசப் பண்டிதர் - சுவாமி சகஜாநந்தர் ஆகியோரின் சாதனைகள்” என்னும் தலைப்பில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர்  கி.வெங்கட்ராமன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கருத்துரையாற்றினார்.  அப்போது கி.வெங்கட்ரமான், அயோத்திதாசர் – சுவாமி சகஜாநந்தர் ஆகியோரின் அரும்பெரும் சமூகப் பணிகள்,  சாதி ஒழிப்பு போராட்டக் களங்கள்,  வாழ்வியல்,  அரசியல் பண்பாடு, கல்விப் பணி, எழுத்தாற்றல், பேச்சாற்றலின் ஆளுமைகள் , மறைக்கப்பட்ட சமூக மதிப்பீடுகள் குறித்தும்,  அச்சான்றோர்களின் இன்றையத் தேவை குறித்தும் உரையாற்றினார். .எஸ்.சித்தானந்தம் நன்றி கூறினார்.  நிகழ்ச்சியினை பேராசிரியர் அ. அன்பானந்தன்,  .அ.இராஜலிங்கம் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

கருத்தரங்கில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி,  தமிழக உழவர் முன்னணி, ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்,  தமிழக இளைஞர் முன்னணி, சுவாமி சகஜாநந்தா நற்பணி மன்றம்,  நந்தனார் பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்,  தமிழக மாணவர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.