ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

வாலிபால் போட்டி: வைகோ விளையாடிய அணி வெற்றி

கலிங்கப்பட்டி வையாபுரியார் நினைவு கைப்பந்தாட்டக் கழகம் சார்பில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இடையிலான வாலிபால் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 2 ஆவது நாளாக

News image
Updated On :10 மே 2014, 2:51 pm

ஷேக் அப்துல்காதர்

பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் வாலிபால் போட்டியில் சனிக்கிழமை கலிங்கப்பட்டி அணியில் வைகோ களம் இறங்கினார்.

இப்போட்டியில் 30 க்கு 16 என்ற புள்ளி கணக்கில் கலிங்கப்பட்டி வையாபுரியார் அணி வெற்றி பெற்றது.

கலிங்கப்பட்டி வையாபுரியார் நினைவு கைப்பந்தாட்டக் கழகம் சார்பில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இடையிலான வாலிபால் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 2 ஆவது நாளாக சனிக்கிழமை நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டியில் 10 அணிகளும், லீக் முறையில் நடைபெற்ற போட்டியில் 4 அணிகளும் பங்கேற்றன.

இப்போட்டியினை மதிமுக பொதுச்செயலரும், வையாபுரியார் நினைவு கைப்பந்துக் கழகத் தலைவருமான வைகோ தொடங்கி வைத்தார். முதல் சுற்றில் ஏர்வாடி எல்.வி. விளையாட்டுக் கழக அணியும், தச்சை ராயல் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில் ஏர்வாடி எல்.வி. அணி வெற்றி பெற்றது. 2 ஆவது சுற்றில் காசியாபுரம் டால்பின் வாலிபால் அணியும், கொங்கந்தான்பாறை லியோ எங்க்ஸ்டர் அணியும் விளையாடின. இதில் டால்பின் வாலிபால் அணி வென்றது.

3 ஆவது சுற்றில் தச்சை நெல்லை அட்டாக் அணியும், என்.ஜி.ஓ. காலனி ஏ ஒன் வாலிபால் அணியும் விளையாடின. இதில் ஏ.ஒன் அணி வெற்றி பெற்றது. 4 ஆவது சுற்று போட்டியில் ஏர்வாடி எல்.வி. கிளப் அணியும், சங்கனாங்குளம் வாலிபால் மாடசாமி கிளப் அணியும் விளையாடின. இதில் வாலிபால் மாடசாமி அணி வெற்றி பெற்றது.

5 ஆவது சுற்றுப் போட்டியில் பாளையங்கோட்டை அன்புநகர் பி.சி.பி. அணியும், கலிங்கப்பட்டி வையாபுரியார் கைப்பந்துக் கழக அணியும் விளையாடின. கலிங்கப்பட்டி அணியில் மதிமுக பொதுச்செயலர் வைகோவும் களம் இறங்கி விளையாடினார். வாலிபால் போட்டியில் பங்கேற்று விளையாடிய வைகோ பார்வையாளர்கள் கை தட்டி உற்சாகப்படுத்தினர். போட்டியில் 30 க்கு 16 என்ற புள்ளி கணக்கில் வைகோ களம் இறங்கிய கலிங்கப்பட்டி அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து லீக் முறையில் நடைபெற்ற போட்டியில் தருவைகுளம் புனித மைக்கேல் கிளப் அணியும், திருநெல்வேலி சாரா அகதமி அணியும், திருநெல்வேலி பெல் மார்க்கெடிங் கிளப் அணியும், தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி அணிகளும் விளையாடின.மதிமுக மாவட்டச் செயலர்கள் ப.ஆ. சரவணன் (நெல்லை), எஸ். ஜோயல் (தூத்துக்குடி), எஸ். பெருமாள் (மாநகர் மாவட்டம்), இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல்முகம்மதுஅலி, தூய சவேரியார் கல்லூரி முன்னாள் உடற்கல்வி இயக்குநர் பெனடிக்ட், முன்னாள் விளையாட்டு வீரர்கள் சத்யமூர்த்தி, குருசாமி, மாமன்ற உறுப்பினர்கள் டேனியல்ஆபிரகாம், ஜோசப், அரவிந்த் கண்மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ராமக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.