நடிகர் கொலையை மறைக்க நடிகை நாடகம் ஆடியது அம்பலம்: நாளை உடல் தோண்டி எடுப்பு
சென்னையில் கொன்று பாளையங்கோட்டையில் புதைக்கப்பட்ட புதுமுக நடிகர் உடலை தோண்டி எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கொலையை மறைக்க துணை நடிகை காணவில்லை என புகார் தெரிவித்து நாடகம்


சென்னையில் கொன்று பாளையங்கோட்டையில் புதைக்கப்பட்ட புதுமுக நடிகர் உடலை தோண்டி எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கொலையை மறைக்க துணை நடிகை காணவில்லை என புகார் தெரிவித்து நாடகம் ஆடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. நடிகரின் உடல் திங்கள்கிழமை தோண்டி எடுக்கப்படும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நான்குனேரி அருகே பரப்பாடியை சேர்ந்தவர் ரொனால்ட்பீட்டர் பிரின்சோ (37). கணினி மையம் நடத்தி வந்த இவர் பின்னர் இணையதளத்தில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். திரைப்படங்கள் எடுக்க கடன் வழங்கி வந்த ரொனால்ட்பீட்டர் பிரின்சோ, காகிதபுரம் என்ற படத்தில் நடித்தாராம். சாம்பவி திரைப்படத்தில் நடித்த துணை நடிகை ஸ்ருதி சந்திரலேகாவுக்கும், ரொனால்ட் பீட்டருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இதனிடையே இணையதளத்தில் தொழில் செய்து வந்த நடிகர் ரொனால்ட்பீட்டரின் நண்பர் திருநெல்வேலி நகரை சேர்ந்த உமாசந்திரன், தனது மனைவியை அரசு பணியில் சேர்க்க வேண்டும் என்று பணம் கேட்டாராம். ரொனால்ட்பீட்டர் பணம் கொடுக்காததால் அவர் மீது உமாசந்திரனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. பல பெண்களுடன் பழக்கம் இருந்ததால், துணை நடிகை ஸ்ருதி சந்திரலேகாவுக்கும் நடிகர் ரொனால்ட்பீட்டருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து உமாசந்திரனும் நடிகை ஸ்ருதியும் ரொனால்ட் பீட்டரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த கொலைக்கு ரொனால்ட்பீட்டரின் கார் டிரைவர் ஜான்பிரின்சன் உதவியாக இருந்தாராம்.
நடிகர் ரொனால்ட்பீட்டரை கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் தேதி சென்னையில் வைத்து கொலை செய்தனர். பின்னர் காரில் அவரது உடலை திருநெல்வேலிக்கு கொண்டு வந்தனர். பாளையங்கோட்டை ஆசீர்வாதபுரத்தில் ரொனால்ட்பீட்டர் உடலை புதைத்தனர்.ரொனால்ட்பீட்டரை கொலை செய்ததை மறைக்க திட்டமிட்ட துணை நடிகை ஸ்ருதி சந்திரலேகா, அவரை காணவில்லை என மதுரவாயல் போலீஸில் புகார் செய்து நாடகம் ஆடியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.கொலை செய்யப்பட்ட நடிகர் ரொனால்ட்பீட்டர் உடலை புதைக்க உமாசந்திரனின் நண்பர்கள் பாளையங்கோட்டையை சேர்ந்த ரபீக்உஸ்மான், ஆனஸ்ட்ராஜ், விஜய் ஆகியோர் கணிசமான தொகையை பெற்றுக் கொண்டு அங்கு புதைத்ததாக கூறப்படுகிறது.
இக் கொலை வழக்கில் ரபீக்உஸ்மான், ஆனஸ்ட்ராஜ், விஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ரொனால்ட்பீட்டரின் கார் டிரைவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையில் தொடர்புடைய துணை நடிகை ஸ்ருதி சந்திரலேகா, நெல்லையை சேர்ந்த நிர்மல் ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நாளை தோண்டி எடுப்பு:
திங்கள்கிழமை நடிகர் ரொனால்ட்பீட்டரின் உடல் தோண்டி எடுக்கப்படும் காவல்துறை துணை ஆணையர் மாதவன் தெரிவித்தார். பிரேத பரிசோதனையை தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...