சிதம்பரம் என்சிசி அதிகாரிக்கு விருது!
புதுச்சேரி ஜிப்மர் வளாகத்தில் பாண்டிச்சேரி குழுமம் தேசிய மாணவர் படை பொன்விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் 4-வது தமிழ்நாடு தொழில்நுட்ப என்சிசி பிரிவைச் சேர்ந்த சிதம்பரம் ராமசாமி


சிறப்பாக பணியாற்றியதற்காக சிதம்பரத்தைச் சேர்ந்த ராமசாமி செட்டியார் பள்ளி என்சிசி அதிகாரிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் வளாகத்தில் பாண்டிச்சேரி குழுமம் தேசிய மாணவர் படை பொன்விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் 4-வது தமிழ்நாடு தொழில்நுட்ப என்சிசி பிரிவைச் சேர்ந்த சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி முதன்மை என்சிசி அதிகாரி ஜெ.சுந்தரலிங்கத்திற்கு சிறந்த என்சிசி படை அதிகாரிக்கான விருதினை ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரவிக்குமார் வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி என்சிசி குரூப் கமாண்டர் எம்.கே.ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விருது பெற்ற என்சிசி அதிகாரி ஜெ.சுந்தலலிங்கத்திற்கு அண்ணாமலைநகர் என்சிசி கமாண்டிங் அதிகாரி கர்னல் ஓய்.எஸ்.பார்மர், பள்ளி செயலர் எம்.ஆர்.கிருஷ்ணன், தலைமை ஆசிரியர் ஜி.தமிழரசன் ஆகியோர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...