ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

64 ஆவது நாளாக போராட்டம்: நெல்லையில் விசைத்தறித் தொழிலாளர்கள் முற்றுகை

சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க ஒப்பந்தம் ஏற்பட்ட போதிலும் கூலி உயர்வு கிடைக்காததால் 64 ஆவது நாளாக திங்கள்கிழமை விசைத்தறி தொழிலாளர்கள் ஆட்சியர்

News image
Updated On :12 மே 2014, 9:10 am

ஷேக் அப்துல்காதர்

சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க ஒப்பந்தம் ஏற்பட்ட போதிலும் கூலி உயர்வு கிடைக்காததால் 64 ஆவது நாளாக திங்கள்கிழமை விசைத்தறி தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சங்கரன்கோவில் விசைத்தறித் தொழிலாளர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். காட்டன் சேலை ரகங்கள் விசைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தனியார் தொழிற்கூடங்களில் சென்றும், வீடுகளில் தறி அமைத்தும் நெசவுத் தொழிலாளர்கள் தொழில் செய்து வருகின்றனர்.விசைத்தறி தொழிலாளர்களுக்கு 75 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும், தேசிய பண்டிகை விடுமுறை தினத்திற்கு நாள் ஒன்றுக்கு ரூ. 300 வீதம் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து ஏப். 28 ஆம் தேதி தொழிலாளர் துணை ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 23 சதவீதம் கூலி உயர்வு வழங்குவதென ஒப்பந்தம் செய்யப்பட்டது.

கூலி உயர்வு வழங்குவதென ஒப்பந்தம் ஏற்பட்ட போதிலும் தனியார் நிறுவனத்தினர் விசைத்தறி தொழிலாளர்களுக்கு முழுமையாக கூலி உயர்வு வழங்கவில்லை. மேலும் வீடுகளில் தறி அமைத்து நெசவும் செய்யும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விசைத்தறித் தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.

முற்றுகை: இதனிடையே சங்கரன்கோவில் வட்டார விசைத்தறி பேக்டரி தொழிலாளர்கள் சங்க (சிஐடியூ) நிர்வாகிகள் தலைமையில் தொழிலாளர்கள் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். ஒப்பந்தப்படி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முற்றுகையிட்டனர். ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கையை வலியுறுத்தி 65 ஆவது நாளான செவ்வாய்க்கிழமை சங்கரன்கோவிலில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார் அமைப்பின் செயலர் மாடசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.