/

சிதம்பரம் அருகே மினிலாரி கவிழ்ந்து 18 பேர் காயம்

சிதம்பரம் அருகே உள்ள சிவாயம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் உத்திரகுமாரிக்கும், அய்யனூர் அக்கிராமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜிற்கு சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் திங்கள்கிழமை

News image
Updated On :12 மே 2014, 9:00 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே திருமண கோஷ்டி சென்ற மினிலாரி கவிழுந்து 18 பேர் காயமடைந்தனர்.

சிதம்பரம் அருகே உள்ள சிவாயம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் உத்திரகுமாரிக்கும், அய்யனூர் அக்கிராமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜிற்கு சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது. பின்னர் மணமக்கள் மற்றும் உறவினர்கள் மாப்பிள்ளை வீடான அய்யனூர் அக்கிராமங்களம் சென்றனர்.

பின்னர் அங்கிருந்து மணமகள் உத்திரகுமாரியின் தாயார் சாந்தி மற்றும் உறவினர்கள் மினிடோர் லாரியில் சிவாயம் கிராமத்திற்கு சென்றனர். அப்போது பூங்குடி பஸ்நிறுத்தம் அருகே மினிலாரியின் அச்சுமுறிந்து சக்கரம் கழன்று, லாரி கவிழ்ந்தது. இதில் வேலு (38), அறிவழகன் (28), ஜமுனாராணி (9), சரவணன் (27), சாமிதுரை (40), சாந்தி (40),பாண்டியன் (27), ஆனந்த (22) உள்ளிட்ட 18 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து சிதம்பரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.